பெங்களூரு: சமூகவலை தளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பெங்களுருவில் உள்ள மொபைல் போன்களுக்கான திறனாய்வு மற்றும் பராமரிப்பு மென்பொருள்களைத் தயாரிக்கும் லிட்டில் ஐ லேப்ஸ் என்னும் நிறுவனத்தை அறிவிக்கப்படாத ஒரு தொகைக்கு வாங்கியதன் மூலம் இந்தியாவில் முதன் முதலாக தன் வர்த்தகக் காலடியை எடுத்து வைத்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
எனினும், தொழில்நுட்ப செய்தி இணையதளமான டெக்ரஞ்ச் இந்த விற்பனையின் மதிப்பு சுமார் 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என அளவிட்டுள்ளது. அளவு சிறியதாக இருந்தாலும், பேஸ்புக் நிறுவனத்தால் முதன்முதலில் வாங்கப்படும் இந்திய கம்பெனியாக லிட்டில் ஐ முக்கியத்துவம் பெறுகிறது.
வல்லரசு பாதையை நோக்கி இந்தியா!!
இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில் பட தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய தொழில் தொடங்கும் சூழலை வலுப்படுத்தும் ஒரு மிக முக்கிய மைல் கல் என்று கூறலாம். இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் சிலி நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா மேலும் ஒளிரும் நிலைக்கு வந்துள்ளது.
ரெட்பஸ் நிறுவன விற்பனை..
சமீபத்தில் நாச்பெர்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம் இந்திய பேருந்து முன்பதிவு செய்யும் இணைய தளமான ரெட்பஸ்-ஐ வாங்கியதும் அதன் பிறகு தற்போது பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடும், இந்திய தொழில் தொடங்கும் சூழலுக்கு பெரும் உறுதுணையாகவும் வழியாகவும் அமையும்.
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தூண்..
"இந்த முயற்சியின் மூலம், லிட்டில் ஐ லேப்ஸ், பேஸ்புக் முயற்சிகளில் பங்கெடுத்து மொபைல் மென்பொருட்கள் முன்னேற்றத்தில் அடுத்த கட்டத்தை அடைய முயலும். இது பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு என்பதோடு, நாங்கள் அதுபோன்ற ஒரு சிறந்த அணியில் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என அந்நிறுவன இணையதள அஞ்சல் குறிப்பு தெரிவிக்கிறது.
கலிபோர்னியா பயணம்..
இந்த ஒப்பந்தம் முடிந்த கையேடு, ஒட்டுமொத்த லிட்டில் ஐ லேப்ஸ் அணியும், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகம் அமைத்துள்ள மென்லோ பார்க்கிற்கு இடம் மாற்றம் செய்ய உள்ளது.
முக்கிய பணிகள்..
அங்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வர்த்தக முயற்சியான மொபைல்களுக்குத் தேவையான திறன் குறைபாடுகளை நீக்கும் கருவிகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடரும்.
முதலீட்டு உதவி!!
லிட்டில் ஐ லேப்ஸ் வேஞ்சரீஸ்ட் மற்றும் ஜிஎஸ்எஃப் ஆகிய முதலீட்டாளர்களின் முதலீடுகளின் துணையோடு நடத்தப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications