ஆன்லைன் விற்பனையில் முன்னேற்றம் கண்ட 'நமோ ஸ்டோர்'

மும்பை: நமோ ஸ்டோர் என்னும் இணையதள சில்லறை வர்த்தகத்தை, வலைதளத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம், பாரதிய ஜனதா பார்ட்டியின் (பிஜேபி) பிரதம மந்திரி வேட்பாளாரான நரேந்திர மோடியின் ப்ராண்ட் இப்போது பெரும் விமர்சியாக வியாபாரம் செய்யப்படுகிறது.

ஆதரவாளர்களால் நமோ என்றும் அழைக்கப்படும் நரேந்திர மோடியின் வாழ்க்கைமுறை மற்றும் ஸ்டைல்களால் ஈர்க்கப்பட்டு அதனை பின்பற்றும் வகையிலான பொருட்கள் இங்கே விற்கப்படுகிறது. டீ-ஷர்ட், கையில்லா ஜாக்கெட், பென் ட்ரைவ்கள், குறிப்பேடுகள் போன்ற பல விதமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.15 ரூபாய் முதல் 450 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வரை இங்கே விற்கப்படுகிறது.

"இந்த பொருட்களின் விற்பனையின் மூலம் மக்களிடையே மாறுதலை உண்டாக்கி நல்லதொரு வருங்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தும்", என்று அந்த இணையதளம் கூறுகிறது.

டேக் இந்தியா மெர்சண்டைசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதள அங்காடி, பல தன்னார்வமுடையவர்களின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமானது என்றும் அந்த இணையதளம் கூறுகிறது. ஆனால் அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை.

ஆன்லைன் விற்பனையில் முன்னேற்றம் கண்ட 'நமோ ஸ்டோர்'

இந்த இணையதள அங்காடி போக, இந்தியாவில் உள்ள பல நகரங்களில் கடை திறக்கவும் திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. அதை அகமதாபாத்திலிருந்து தொடங்க உள்ளனர்.

"நமோ ஸ்டோர் தன்னுடைய சொந்த சில்லறை அங்காடிகளை இந்தியாவிலுள்ள பல நகரங்களிலும் பெரிய அளவில் வரும் காலங்களில் திறக்க உள்ளது. இந்த கடைகள் அனைத்தும் இந்தியாவின் பெருநகரங்களில் திறக்கப்படும்", என்று அந்த குழுவில் பெயர் கூற விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 100 மில்லியன் இணையதள பயனாளிகள் உள்ளனர். அதில் 50 சதவீத பேர்களுக்கு மேல் இணையதளம் மூலம் பொருட்களை வாங்குகின்றனர். இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குவதில் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி. அதனை தொடர்ந்து மும்பை மற்றும் அகமதாபாத் நிற்கிறது என்று இண்டஸ்ட்ரி லாபி அசோசியேடட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா, 2013-ல் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.

பல அரசியல் தலைவர்கள், அவர்களின் தனித்துவமான ஆடையணியும் ஸ்டைல்களுக்காக நன்கு அறியப்பட்டவர்கள். உதாரணத்திற்கு ஜவஹர் லால் நேருவின் ஜாக்கெட், ராஜீவ் காந்தியின் எம்ப்ராய்ட் செய்யப்பட ஷால், கட்சியின் பெயர் எழுதப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தொப்பி.

மோடி குர்தா என அறியப்படும் மாண்டரின் காலர் சட்டைகள், அகமதாபாத்தில் உள்ள சில்லறை நிறுவனமான ஜேட் ப்ளூவால், தன் சொந்த பிராண்டாக பதியப்பட்டு விற்கத் தொடங்கியவுடன் மிகவும் புகழ் பெற ஆரம்பித்தது. இதனை செய்திட குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்தியாவில் அதிகமாக பின்பற்றப்பட்டு இணையதளத்தில் தேடப்பட்டு வருபவர் தான் மோடி. அதே போல் சமுதாய வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர்ரில் அதிக அளவிலான பின்பற்றுபவர்களை கொண்டுள்ளார். இந்தியாவில் மோடிக்கு உண்டாக்கிய ப்ராண்ட்டை போல் இது வரை எந்த ஒரு பிரதம மந்திரி வேட்பாளருக்கும் செய்ததில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+