சென்னை: உரு இல்லாமல் இருக்கும் பங்குகளை அடமானமாக வைத்து கடன் வாங்கினால் குறைந்த கால மற்றும் நடுத்தர கால நிதி பிரச்னையை போக்கலாம். ஆனாலும் கூட முடிந்த வரையில் அதனை தவிர்த்திட வேண்டும்.
அதே போல் கடன்கள், வங்கிகளால் பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளோடும் அளிக்கப்படுகிறது. பங்குகளை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடன்களால் ஏற்படும் இடர்பாடுகளை பற்றி பார்க்கலாமா?
முதல் தர பங்குகளுக்கு மட்டும்..
பொதுவாக பங்குகளை வைத்து கொடுக்கப்படும் கடன்கள் அதிக புள்ளிகளை உடைய பங்குகளின் (ஸ்க்ரிப்) அடிப்படையிலே கொடுக்கப்படும். அதவாது 'AAA' தரத்தை கொண்டுள்ள நிறுவன பங்குகளுக்கு (ஸ்க்ரிப்) மட்டுமே வங்கிகள் இந்த கடனை அளிக்கும்.
தரம் இல்லை.. கடன் இல்லை..
குறைவான தரத்தோடு விளங்கும் பங்குகள் மற்றும் வணிகத்தில் ஈடுபடாத பங்குகளை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்க முடியாது.
கலப்பு நிறுவன பங்குகள்..
ஒற்றை நிறுவனத்தின் பங்கை வைத்து வங்கிகளிடம் கடன் வாங்க முடியாது. மாறாக பல நிறுவனத்தின் பங்குகளை கொண்டு தான் கடன் வாங்க முடியும். ஒரு வேளை, அடமானத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகள் வெகுவாக சரிந்தாலும் கூட மற்றவைகளை வைத்து அதனை ஈடு செய்து கொள்ள முடியும்.
பங்குகளின் உரிமை..
பங்குகளை அடமானமாக வைத்து கடன் அளிக்கும் வங்கிகள் அந்த பங்குகளின் மீது உரிமையை எழுதி வாங்கிக் கொள்ளும். அதாவது கடன் வாங்கியவர்களால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் அடமானமாக உள்ள பங்குகளை, வங்கிகள் விற்று, கடனுக்கு ஈடாக அந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
50% மட்டுமே கடன்
அடமானம் வைத்த பங்குகளுக்கு அதன் மதிப்பிலிருந்து 50 சதவீதத்திற்கு மேல் கடன் தொகை அளிக்கப்பட மாட்டாது. அதாவது, உங்களுக்கு 5 லட்ச ரூபாய்க்கு கடன் வேண்டும் என்றால் குறைந்தது 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை வங்கியில் அடமானம் வைக்க வேண்டும்.
வருவாய் அளிக்கும் பங்குகள் மட்டும்
பொதுவாக பங்குகளின் விலையில் பெருமளவு ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் சொத்துக்களை தான் அடமானமாக எதிர்ப்பார்க்கும் வங்கிகள்.
வட்டி மிகவும் அதிகம்
சொத்துக்களுக்கு அளிக்கப்படும் கடனை விட, பங்குகளுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு அதிகளவில் வட்டி வசூலிக்கப்படுகிறது. பங்குகளை விட சொத்துக்களை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடன்கள் 100 அடிப்படை புள்ளிகள் குறைவாக இருக்கும். இருப்பினும் தனிநபர் கடனை விட பங்குகளை வைத்து வாங்கும் கடனுக்கு வட்டி குறைவே.
வங்கி
பங்குகளை வைத்து வாங்கப்படும் கடன் தொகை, யூக வணிகத்திற்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்று கடன் வாங்கியவரிடம், வங்கி எழுத்து வடிவில் வங்கி பெற்றுக்கொள்ளும்.
போனஸ் பாதிக்காது..
பங்குகளை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கினாலும் கூட, அந்த பங்குகளினால் வரும் போனஸ் வருமானம், கடன் வாங்கியவரையே வந்து சேரும். கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்பு, பங்குகளின் மீது வங்கிகளுக்கு உள்ள உரிமை ரத்து செய்யப்படும்.
வங்கி கடன்
டெபாசிட்டரி பார்டிசிபன்ட்டாக வங்கி செயல்படும் போது, அந்த பங்குகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்த கடனை வங்கிகள் வழங்கலாம்.
முன்தொகை..
பங்குகளின் விலையில் கடும் ஏற்ற இறக்கம் இருப்பதால் அதற்கு மிகப்பெரிய விளம்பு பணத்தை கட்டிய பிறகு தான் கடன் பெற முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications