மின்னணு வணிகத்தில் அன்னிய முதலீடு!! மக்களுக்கு சாதகமா? பாதகமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இணைய வணிகத் துறையில் (E-Commerce) அன்னிய முதலீட்டிற்கு (FDI) நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடு அடிப்படைவசதி மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு, உற்பத்தி வசதி வாய்ப்புக்கும் தூண்டுகோலாக அமையும், ஆனால் இது அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்புக்கும் வழிவகுக்கும் என தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DIPP) கலந்துரையாடல் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

வணிக நுகர்வோர் பிரிவில், அன்னிய முதலீட்டிற்கு (FDI) அனுமதிப்பதில் உள்ள எட்டு நன்மைகளை பட்டியலிட்டுள்ள தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP), இதன் மூலமாக வாடிக்கையாளர் சேவையும் மேம்படுத்தப்படும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சீரான முறையில் ஆர்டர் எடுத்தல் மற்றும் விற்பனைக்கு பின்னரான வாடிக்கையாளர் சேவை, போட்டி விலையிடல், சந்தையில் வாடிக்கையாளர்கள்/ விற்பனையாளர்கள் நுழைவை அதிகரித்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடையக் கூடிய வசதியை, குறுகிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), தொழிலாளர்களுக்கு உருவாக்குதல்" ஆகியவற்றையும் இந்த முதலீட்டின் மூலம் வழி வகுக்கும் என இந்த அறிக்கை கூறியுள்ளது.

இடைத்தரகர்களின் தொல்லை

இடைத்தரகர்களின் தொல்லை

இந்த நடவடிக்கை, வணிகத்தில் இடைத்தரகர்களின் தேவையைக் குறைத்து, பரிவர்த்தனை செலவுகள், நிர்வாகச் செலவுகள், சரக்கிருப்பு பராமரிப்பு செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகள் ஆகியவற்றைக் குறைக்க உதவுவதுடன், ஒரு சிறந்த வேலைக்கலாச்சாரம் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கும் வழிவகுக்கும் எனவும் இது தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகம்

சில்லறை வர்த்தகம்

இருப்பினும், பல்வகை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் (MBRT), வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு எதிராக வளர்ச்சி செயல்பாடுகள் உள்ளன எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அரசு கடந்த ஆண்டில், MBRT-யில், 51 சதவிகிதம் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது.

வளர்ச்சி தான்.. ஆனால் பாதிப்பு அதிகம்..

வளர்ச்சி தான்.. ஆனால் பாதிப்பு அதிகம்..

"மின் வணிகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பதால், மின் வணிகத்தில் ஈடுபடுவர்கள் முழுமையான முறையில் எந்த இடத்தையும் அடையமுடியும், இது MBRT-யில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுச் சக்திக்கு எதிராக இருக்கும். அதாவது, 1 மில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை கொண்ட நகரங்களுக்கு அல்லது மாநில ஒப்புதலுக்கு இணங்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் நகரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்" என இந்த அறிக்கை கூறியுள்ளது.

சந்தையின் நிலை..

சந்தையின் நிலை..

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மின்-சில்லறை வணிகத்திற்கான இடத்தை வழங்குவதற்கு, இந்திய சந்தை இன்னும் தயாராக இல்லை என இந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Allowing FDI In E-commerce Has Pros And Cons: DIPP

Foreign direct investment in e-commerce will boost infrastructure development and spur manufacturing facility among other advantages, but it could also lead to large scale job losses, says a discussion paper by DIPP.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X