உறுதியான நிலையில் உலக பொருளாதாரம்!! பின்தொடரும் அபாயங்கள்..

மும்பை: உலக பொருளாதாரத்தைப் பற்றி நேர்மறையான மற்றும் உண்மையான கருத்துகளை உலக வங்கி அவ்வபோது வெளியிட்டு வருகிறது. உலக வங்கியின் இத்தகைய வெளியீட்டு அறிக்கைகள் முதலீட்டாளர்கள், வங்கிகள் போன்ற முதலீட்டு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கித் துறையில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் நாட்டின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை பாதிக்கலாம் என்று எச்சரிக்கையும் செய்துள்ளது.

வளரும் நாடுகளின் பொருளாதாரம், வளர்ச்சி நிலையை எட்டத் துவங்கியுள்ளது மற்றும் உயர்-வருமானம் பெறும் பொருளாதாரங்கள் இதில் திருப்பு முனைகளாக இருக்கும்' என்று உலக பொருளாதார வாய்ப்புகள் பற்றிய அறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்க மத்திய வங்கி தன்னுடைய 'மாபெரும் நிதி தூண்டுதல்களை (Massive Monetary Stimulus)' குறைத்து வருவதால், அது உலகளாவிய வட்டி விகிதங்களை அதிகரித்து 'தலைசுற்ற' செய்யவும் மற்றும் 'மூலதன அளிப்பு வாய்ப்புகளை பாதிக்கவும் செய்யும்' என்று இந்த வங்கி எச்சரித்துள்ளது.

3.2% வளர்ச்சியை எட்டும்!!

3.2% வளர்ச்சியை எட்டும்!!

இந்த வங்கி 2013-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி 2.4 சதவிகிதமாக இருந்தில் இருந்து வளர்ச்சி பெற்று 2014-ம் ஆண்டில் 3.2 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த வளர்ச்சி 2015-ம் ஆண்டில் 3.4 சதவிகிதமாகவும் மற்றும் 2016-ம் ஆண்டில் 3.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

'வளர்ந்த பொருளாதாரங்களின் செயல்திறன் ஊக்கம் பெற்றுள்ளன, மேலும் வரும் மாதங்களில் வளரும் நாடுகளில் உறுதியான வளர்ச்சிக்கு உதவும்' என்று உலக வங்கி குழுமத்தின் தலைவர் ஜிம் யங் கிம் குறிப்பிட்டுள்ளார்.

ஜிடிபி

ஜிடிபி

வளர்ந்த நாடுகளில் 2013-ம் ஆண்டில் 1.3 சதவிகிதமாக இருந்த மொத்த தேசிய உற்பத்தியானது (Gross domestic product ), 2016-ம் ஆண்டில் 2.4 சதவிகிதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2003-07 ஆண்டுகளில் கவலை தரும் வளர்ச்சி

2003-07 ஆண்டுகளில் கவலை தரும் வளர்ச்சி

வளரும் மற்றும் முன்னேறி வரும் பொருளாதாரங்களில் 2013-ம் ஆண்டில் 4.8 சதவிகிதமாக இருந்த வளர்ச்சியானது, 2016-ம் ஆண்டில் 5.7 சதவிகிதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 2003-2007-ம் ஆண்டுகளின் பெரும் வளர்ச்சி போன்றே தோன்றினாலும், அது 'நிலையற்ற' (Unsustainable) வளர்ச்சியை 'சமனப்படுத்தும் (Cooling off)' செயலாகவே கருதப்படுவதால், 'இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை' என்று கூறுகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி

யூரோ ஜோன் (Euro Zone) என்று அழைக்கப்படும் ஐரோப்பிய பகுதிகள், இரண்டு ஆண்டுகளின் தடுமாற்றங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு 1.1 சதவிகிதமும், 2015-ம் ஆண்டில் 1.5 சதவிகிதமும் வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நிலை என்ன??

அமெரிக்காவின் நிலை என்ன??

2013-ம் ஆண்டில் 1.8 சதவிகிதமாக இருந்து 10 காலாண்டுகளுக்கு விரிவாக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தி 2014-ம் ஆண்டில் 2.8 சதவிகிதம் உயரும் என்று மதிபிப்டப்பட்டுள்ளது. இந்த மதிப்பு 2016-ம் ஆண்டில் 3 சதவிகிதமாகும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+