மும்பை: டாடா குழுமத்தின் தூண் என போற்றப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் 2013-14 ஆம் ஆண்டின் பணியமர்த்தல் இலக்கான ஐம்பதாயிரம் என்ற இலக்கை மேலும் உயர்த்தியுள்ளது. அதனால் டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டும் மட்டும் சுமார் 55,000 பணியிடங்களை நடப்பாண்டில் நிரப்ப உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல செய்தி என்றே சொல்லலாம்.
இந்தியாவின் மிகப்பெரும் பீபிஒ நிறுவனமான டிசிஎஸ் பத்து பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயும் சுமார் மூன்று லட்சம் பணியாளர்களையும் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வரும் 2014-15 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் இருபத்தைந்தாயிரம் பட்டதாரிகளை வளாகத் தேர்வு முறையில் பணியமர்த்தவுள்ளதாக அதன் குழும மனிதவளத் துறை இணைத் தலைவர் அஜொய் முகர்ஜி தெரிவித்தார். பிற பணியமர்த்துதல்கள் பின்வரும் சேர்ப்புகளிலும் வெளிநாட்டு ஆள் சேர்ப்பிலும் மேற்கொள்ளப்படும் என்றார்
அமெரிக்கப் பொருளாதார உயர்வு..
உலகின் மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேறி வரும் நிலையில், இந்திய பிபீஒ நிறுவனங்களுக்கு தகவல்தொடர்புத் தொழில் ஏற்றுமதிகள் 60 சதவிகிதம் வரை உயரவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
77.5% உயர்வு..
டிசிஎஸ் நிறுவனம் 5463 பேரை பணியமர்த்தியதுடன், இதில் முதல் நிலை பணியாளர்களும் அடங்கும் உள்ளிட்ட பணியாளர்களின் உபயோகம் 77.5 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்திருந்த்து. பணியாளர் வெளியேற்றம் 10.9 சதவிகிதம் என்ற குறைந்த அளவில் இருந்தது.
பணியாளர் வெளியேற்றம்
இதற்கு மாறாக, ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றும் இன்போசிஸ் நிறுவனம் பணியாளர் வெளியேற்றம் 18.1 என்ற அளவில் முன் எப்போதும் இல்லாத அளவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
15,000 பணி நியமனம்
டிசம்பர் வரை முடிந்த காலாண்டில் சுமார் 6,342 முதல் நிலை பணியாளர்கள், 5,492 அனுபவமுள்ளவர்கள் மற்றும் 2,831 வெளி நாட்டு பணியாளர்கள் உட்பட மொத்தம் 14,663 பேரை நியமித்தது.
விற்பனை சரிவு
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் அக்டோபர் மற்றும் டிசம்பர் வரையிலான காலாண்டில் எதிர்பார்த்த்தை விட அதிக லாபமும் சற்று குறைந்த விற்பனை வளர்ச்சியும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications