லூப் நிறுவனத்தை கைபற்ற துடிக்கும் பார்தி ஏர்டெல்!!

மும்பை: நாம் அனைவரும் நினைத்த உடன் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள தொலை தொடர்பு நிறுவங்களின் சேவை மிகவும் அவசியமாக உள்ளது. இதையும் தாண்டி பல வசதிகளை இன்று நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களுள் முன்னணியில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி அதன் மூலம் தனது வணிகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், லூப்(loop) என்கின்ற மொபைல் நிறுவனத்தை கைபற்ற பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சாதகமானால் லூப் நிறுவனத்தின் 3 மில்லியன் வாடிக்கையாளர்களை, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெற்று தரும்.

தனது மொபைல் தொலைபேசிக்கான மும்பை உரிமத்தினை தன்வசம் கொண்டுள்ள லூப் நிறுவனம், ஏர்டெல் மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி ரூ.750 கோடிக்கான வணிகத்தினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

1000 கோடி மதிப்புடைய ஒப்பந்தம்..

1000 கோடி மதிப்புடைய ஒப்பந்தம்..

தற்போது லூப் நிறுவனத்தின் கடன் தொகையான ரூ400 கோடியினையும், இந்நிறுவனம் ஒப்பந்தத்தில் இணைத்துள்ளது, இதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மறுப்பு..

நிறுவனங்கள் மறுப்பு..

இது குறித்து கருத்து தெரிவிக்க இரு நிறுவனங்களும் மருத்து விட்ட போதிலும், லூப் தனது மொபைல் தொலைபேசிக்கான வணிகம் மற்றும் மொபைல் செயல்பட்டு கோபுர தளங்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

லூப் நிறுவனத்தின் சொத்துக்கள்

லூப் நிறுவனத்தின் சொத்துக்கள்

அடிப்படை விலை 2,624 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள பிரீமியம் 900 Mhz அலைவரிசையினை உடைய 8 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றிற்கான உரிமத்தினை தன் வசம் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சுமார் 2௦௦௦ மொபைல் செயல்பாட்டு கோபுர தளங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கி வருகிறது. இவற்றில் 500 கோபுர தளங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

போட்டி போடும் நிறுவனங்கள்..

போட்டி போடும் நிறுவனங்கள்..

ஆர்வமுள்ள சில நிறுவனங்கள் லூப் நிறுவனத்தின் மொபைல் வணிகத்தினை மட்டும் பெற்று கொள்ள விரும்புகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் மொபைல் மற்றும் கோபுர தளங்கள் இணைந்த வணிகத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றன. ஏர்டெல் நிறுவனம் மொபைல் வணிகத்தினை மட்டும் பெற்றுகொண்டால் khaitan -க்கு சொந்தமான லூப் நிறுவனம் தன் கோபுர தளங்களை தனியாக வேறு பிற நிறுவங்களுக்கு விற்க நேரிடும்.

30 லட்ச வாடிக்கையாளர்கள்..

30 லட்ச வாடிக்கையாளர்கள்..

தற்போது வோடஃபோன் நிறுவனம் 6.8 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு முன்னணியில் இருந்து வருகிறது. லூப் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்று, மும்பை வட்டாரத்தில், தனது செயல்பாடுகளால் உயர்ந்த இடத்திற்கு முன்னேறும்.

ஸ்பெக்ட்ரம் ஏலம்

ஸ்பெக்ட்ரம் ஏலம்

மிகவும் அரிய வாய்ப்பான 900Mhz அலைவரிசையினை கொண்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியொ இன்ஃபோகாம் நிறுவனம் பங்கேற்று ஏலத்தொகை கேட்க விண்ணப்பித்துள்ளது. இந்த ஏலம் பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கும் முக்கியமான ஒன்றாகும்.

ஏலத்தின் திட்ட வடிவம்

ஏலத்தின் திட்ட வடிவம்

900 Mhz அலைவரிசையினை உடைய 16 Mhz ஸ்பெக்ட்ரம் ஏலத்தினை டெல்லி மற்றும் மும்பையில் தனித்தனியாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் 14Mhz ஸ்பெக்ட்ரம் ஏலத்தினை கொல்கத்தாவிலும்நடத்த அரசு முடிவு செய்துள்ளது.விண்ணப்பத்தாரர்கள் குறைந்தது 5Mhz -க்கான ஏலத்தொகையை கொண்டவராக இருக்க வேண்டும்.

விலை நிலவரம்

விலை நிலவரம்

எனவே அரசு 5Mhz ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு அடிப்படை விலையாக 1,800 கோடியை டெல்லியிலும், 1,640 கோடியை மும்பையிலும்,625 கோடியை கொல்கத்தாவிலும் நிர்ணயம் செய்துள்ளது.

நெருக்கடியில் லூப் நிறுவனம்..

நெருக்கடியில் லூப் நிறுவனம்..

லூப் நிறுவனம் இந்த ஏலத்தினை தவிர்க்க முடிவு செய்துள்ளது. லூப் நிறுவனத்தின் மும்பைக்கான உரிமம் வரும் நவம்பரில் காலாவதியாகிறது. எனவே அதன் செயல்பாடுகளை தொடர மறுபடியும் ஏலத்தொகை செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+