மும்பை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் பயணிகளை கவர புதிய சலுகை திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆஸ்திரேலியா செல்பவர்களுக்கு சிறப்புக் கட்டணமாக ரூபாய் 58,000 ஆக அறிவித்துள்ளது.
இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் கட்டண குறைப்பு திட்டத்தில் பதிவுகளை செய்துகொள்ளலாம்.
சிங்கபூரிலிருந்து இயக்கப்படும் சுமார் 120க்கும் மேலான விமானங்கள் மூலம் பயணிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், ப்ரிஸ்பேன், டார்வின், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி நகரங்களை சுலபமாக அடைய முடியும்.

வழித்தடம் மாறும் பயணிகள் பரிசுக்கூப்பன்களைப் பெறலாம், இது மார்ச் 31, 2014 வரை செல்லுபடியாகும். இவற்றை சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தைக் கடக்கும்போது, கடைகள், உணவகங்கள் மற்றும் பயனிகள் காத்திருப்பு அரங்கங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கட்டண சலுகை அவகாசம்
இக்கட்டணச் சலுகை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28, 2014 முடியவுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30, 2014 வரை தொடங்கப்படும் வெளிப் புறப்பாடு பயணங்களுக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications