மும்பை: மலிவு விலை விமான சேவையை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஜனவரி 21 முதல் 23 வரை பதிவு செய்யப்படும் அனைத்து உள்நாட்டு பயணத்திற்கான டிக்கெடுகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அளித்துள்ளது. இதனால் மக்கள் ஆர்வமுடன் இச்சலுகை திட்டத்தை பயன்படுத்த முனைந்துள்ளனர்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சிஎன்பிசி- டிவி18 சேனலுக்கு அளித்த போட்டியில் "இச்சலுகை முப்பது நாள் முன்பதிவுக்கும் செய்யப்பட்ட டிக்கெட்களுக்கும் பொருந்தும்" என அவர் தெரிவித்தார். மேலும் அவர் இக்கட்டணக் குறைப்பு நிறுவனச் சேவையில் நஷ்டத்தை அடைய செய்யாது, இது முற்றிலும் பயணிகளி எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியே எனவும் தெரிவித்தார்.
சன் குழுமத்தின் சிஎஃப்ஒ சிஎன்பிசி- டிவி18 சேனலுக்கு அளித்த போட்டியில் "இந்த முயற்சியின் மூலம் நிறுவனத்திற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படாது" என தெரிவித்தார்.

கடந்த வருடமும் இதேபோல் சில் திட்டங்களை இந்நிறுவனம் அறித்தது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 10 லட்சம் டிக்கெடுகளை வெறும் 2013 ரூபாய் வழங்கியது. இந்த சலுகை விலை திட்டம் முன்று நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விமான போக்குவரத்து துறையில் ஜனவரி - மார்ச் மாதத்தில் பயணிகளின் வருகை மிகவும் மந்தமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் முயற்சியே இந்த விலை குறைப்பு திட்டமாகும். இதன் மூலம் அதிகப்படியான பயணிகளை கவர்ந்து நிறுவன செயல்பாடு அதிகரிக்கும்.
இந்த நிதியாண்டு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு மிகவும் மோசமான ஆண்டு என்றே சொல்லாம். விமானத்தின் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கடுமையான போட்டியின் காரணமாக கடும் சிக்கலுக்கு உள்ளானது. இந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 700 கோடி நஷ்டம் அடைந்துள்ளது, அதவாது நிதியாண்டின் முற்பகுதியில் ரூ.508 கோடியும், டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.191 கோடி இழப்பை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications