பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்தை போன்றே விப்ரோ நிறுவனமும் தனது நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகுக்கிறது. 2014ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை பெறுவார்கள் என விப்ரோ நிறுவனம் தெரிவித்தது.
ஐடி துறை நிறுவனங்கள் தனது சம்பள உயர்வு பற்றிய ஒரு தெளிவான நோக்கத்தை ஜனவரி தொடக்கத்திலேயே உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும் என மனித வளத்துறை மூத்த துணைத் தலைவர் சவுரப் கவில், பிஸினஸ் லைன் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
வளர்ச்சி பாதையில் ஐடி துறை..
முழுமையாக திட்டமிடப்பட்டுள்ள சம்பள உயர்வு பற்றிய விவரங்களை அதிகாரபூர்வமாக பகிர்ந்து கொள்ளாத போதிலும், 2015 நிதியாண்டுக்கான ஒரு தெளிவான வணிகப் பார்வையே, சம்பள உயர்வுக்கான நோக்கத்தை பிரதிபலிக்கிறது என விப்ரோ கூறியுள்ளது.
டிசிஎஸ் - விப்ரோ
கடந்த வருடம் டிசிஎஸ் நிறுவனமும், விப்ரோ நிறுவனமும், ஒரே சமையத்தில் ஊதிய உயர்வை அறிவித்தது. 2013ஆம் ஆண்டில் இவ்விரு நிறுவனங்கலும் 8 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்கியது குறிப்பிடதக்கது. இந்த நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் 17 சதவிதகமாக உயர்ந்துள்ளது.
பணியமர்த்தல் திட்டம்
மேலும், நடப்பு காலாண்டுகளில் விப்ரோ செயல்படுத்தவிருக்கும் பணியமர்த்தல் திட்டங்கள் பற்றியும் கவில் தெரிவித்தார். "சில்லறை வணிகம், வாழ்வு-அறிவியல் மற்றும் ஏனைய வணிகம் போன்ற வேறுபட்ட வணிகப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்கும், அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புதிதாக படிப்பை முடித்தவர்கள் ஆகியோர் கணிணி கட்டமைப்பாளர் மற்றும் திட்டமேலாளர் பணிகளில் சேர்க்கப்படுவார்கள்" எனவும் கவில் தெரிவித்தார்.
சரியான அளவில் ஆட்சேர்ப்பு..
அதிக பணியாளர் சேர்க்கை மற்றும் நேரடியான வருவாய் விகிதாசாரம் ஆகியவை நிறுவனத்தின் பெரும் இடர்பாடாக உள்ளது. இதை மாற்றுவதற்கு விப்ரோ நிறுவனம் முயற்சித்து வருகிறது, எனவே கடந்த காலத்தைப் போலவே அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தம் செய்யாது.
3 நிறுவனங்கள்
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில், முதல் மூன்று ஐடி நிறுவனங்களின் முகாமைத்துவத் தேவை மேம்பட்டிருப்பதன் காரணமாக, ஊதிய உயர்வு இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications