நிதி பாற்றாக்குறையில் தவிக்கும் ஏர் இந்தியா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2014ஆம் ஆண்டு துவக்கம் முதல் ஏர் இந்தியா நிறுவனம் பல மாற்றங்களை கொண்டு வந்தது. கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியா பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும் பல அன்னிய நிறுவனகளின் போட்டியின் காரணமாக ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனாலே ஏர் இந்தியா இந்த மாற்று திட்டங்களில் இறங்கியுள்ளது.

 

(ஏர் இந்தியா பணிப் பெண்களுக்கு விடிவு காலம் பிறந்தது!!..)

இதன் ஒரு கட்டமாக ஏர் இந்தியா இரண்டு ‘போயிங் 787 ட்ரீம்லைனர்' விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தது. இந்த விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நிதி பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே 230 மில்லியன் டாலர் இணைப்புக் கடன் பெற ஏர் இந்தியா லிமிடெட் முயற்சிப்பதாக அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியான ஒரு டென்டர் டாக்குமென்ட் மூலமாக தெரியவந்துள்ளது.

நிதி பாற்றாக்குறையில் தவிக்கும் ஏர் இந்தியா!!

ஏர் இந்தியா நிறுவனம் பிப்ரவரி - மார்ச் மாதங்களில், இரண்டு 787 விமானங்களை டெலிவெரி எடுக்க வேண்டியிருப்பதால், ஆறு மாத கால அல்லது ஒருவருடகாலத் தவணையில் இணைப்புக் கடன் பெறுவதற்கான அறிக்கையை கொடுக்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கேட்டுள்ளது.

அரசு நிறுவனமான இந்த ஏர்லைன், விமானத்தை கடன் ஈடாக (செக்யூரிட்டி) வழங்குகிறது. விற்பனை அல்லது குத்தகை ஏற்பாடு முடிவுக்கு வந்த பின்னர் கடனைத் திருப்பி செலுத்தும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கடனுக்கு அரசு உத்தரவாதம் இருக்காது எனவும் இந்நிறுவனம்தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு விமானங்களும் 14, மார்ச் மாதத்தில், ஏர் இந்தியாவின் ட்ரீம் லைனர் ஃப்லீட் கொண்டு செல்லும். இந்த நிறுவனம் தற்போது 11 ஜெட் விமானங்களை இயக்கி வருகிறது, 27 விமானங்கள் ஆடர் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India seeks $230 mn loan to purchase Boeing 787 Deamliner

Air India Ltd is seeking a bridge loan of up to $230 million for taking delivery of two Boeing 787 Dreamliner aircraft from an ongoing order.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X