மும்பை: இந்தியாவின் முன்னணி ஆட்டோ மோட்டார் நிறுவனங்களுள் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடினமான வியாபார போட்டி மற்றும் உயர்ந்து வரும் விலைவாசி சூழலிலும் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் மோட்டார் சைக்கிள் பிரிவு, 2013-2014ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டு முடிவில் தனது நிகர இலாபம் ரூ.905 கோடி என பதிவு செய்தது. இது சென்ற வருடத்தின் இதே காலகட்டத்தின் லாபத்தை விட11% அதிகமாகும்.
விற்பனை, ஏற்றுமதியில் உயர்வு..
தொகுதி அடிப்படையில் விற்பனை 12% வீழ்ச்சியடைந்த போதிலும் ஏற்றுமதியில் 23% உயர்வு அடைந்தது நிறுவனத்திற்கு பெரிதும் உதவியது.
செயற்பாட்டு லாபம்
செயற்பாட்டு லாபம் ரூ1,085 கோடியிலுருந்து ரூ1,092 கோடியாக உயர்ந்தது. செயல்பாட்டின் குறியீடு 21.1 சதவீதத்தை எட்டியது, அது அட்டோமொபைல் சந்தையில் இந்த அடைப்பட்ட காலாணன்டில் பஜாஜ் நிறுவனமே முன்னிலையில் உள்ளது. சந்தையில் சாராசரி குறியீடு 19.8 சதவீதமாகும்.
விற்பனை மந்தம்..
பண்டிகை காலத்தில் விற்பனை அதிகளவில் இருந்தாலும் வலுவானதாக இல்லை என்று அந்நிறுவனத்தின் நிதித் துறை அதிபர் கெவின் தெரிவித்தார். நவம்பர் டிசம்பர் மாதங்களிலும் விற்பனை மந்தமாகவே தொடர்ந்ததாகவும், தொழிற்சாலைக்கு தேவையான இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களான அலுமினியம், ஸ்டீல் ஆகியவற்றிற்கான செலவு அதிகரித்ததற்கு இந்த காலாண்டு முடிவே சிறந்த ஆதாரமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தையின் தேவை குறைவு
ஆய்வாளர்ககளின் கூற்றின்படி குறைவான தேவையின் காரணமாக உள்நாட்டில் பஜாஜ் நிறுவனத்தின் செயல்பாடுகள் நெருக்கடியான சூழ்நிலையில் மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குசந்தையில் லாபம்
ஏற்றுமதியில் பஜாஜ் நிறுவனம் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பங்குசந்தையில் பெற்றுள்ள இலாபத்தின் மூலம் உள்நாட்டில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக யாரீஷ் கோத்தாரி தெரிவித்தார்.
இருசக்கர வாகன பிரிவு
மோட்டார் சைக்கிள் துறையில் ஏற்பட்டுள்ள குறைவான வளர்ச்சி வீதம் பஜாஜ் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்துள்ளது. இதில் எவ்வித தாக்கத்தையும் தோற்றுவிக்காத ஸ்கூட்டர் பிரிவு நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்கிறது என்று INSTITUTION OF BANKING -ன் துணை அதிபர்,ரிக்கேஷ் பாரிக் OSWAS SECURITIES -ன் மோதிலால் ஆகியோர் தெரிவித்தனர்.
பஜாஜ் நிறுவனத்தின் பங்கு நிலை..
மும்பை பங்குசந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் இப்போது 0.28 சதவீதம் குறைந்து 921.05 ரூபாயாக சரிந்தது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications