சென்னை: திருமணம் ஒரு தனிநபர் வாழ்க்கையை பல வழிகளில் மாற்றுகிறது. அதிக மகிழ்ச்சி, பொறுப்புகள் அதிகரித்தல் மற்றும் ஒரு புதிய நபருக்கு ஏற்ப உங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டி இருப்பதால் கொஞ்சம் கவலையும் உருவாகும்.
திருமணத்துக்குப் பின்னர், நீங்கள் இருவரும் வேலைசெய்யலாம் அல்லது ஒருவர் மட்டும் வேலை செய்யலாம். இதுதான் உங்களது வருமானம் மற்றும் செலவுகளை நிர்ணயிக்கும், பெருப்பாலும் இது ஒருவரது வாழ்க்கை தரத்தின் அடிப்படையில் அமையும். வாழ்கையின் குறிக்கோள்கள் மற்றும் நிதி இலக்குகள் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றி திருமணமான தொடக்கத்தில் இருந்தே ஒரு தம்பதியினர் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
உண்மையில், பணவீக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி திருமணமாகிய முதல் நாளில் இருந்தே திட்டமிடத் தொடங்குவது சிறந்தது.
பெரும்பாலும் இந்தியாவில், திருமணத்துக்கு பின்னரே மக்கள் தங்கம் மற்றும் சொத்துகளில் முதலீடு செய்ய துவங்குகின்றனர். பணத்தை மேலாண்மை செய்வது ஒரு முக்கிய செயல்பாடாக கருதப்படுகின்ற அதே நேரம் நிதி திட்டமிடலும் இதற்குள் உள்ளடக்கப்படுகிறது. அதிகமான தம்பதியினர் பண மேலாண்மை அல்லது நிதி திட்டமிடல் ஆகிய இரண்டில் ஒன்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்ரனர். ஆனால் இது தவறு, இவை இரண்டுக்குமே ஒரே நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கான செலவுகள் அவர்கள் பிறந்ததிலிருந்து தொடங்கி, பள்ளி மற்றும் உயர்கல்வி வரை செல்கிறது. வாழ்க்கையின் ஆரம்பத்திலே ஒரு குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் பணி ஓய்வு பெறும் நேரத்தில் ஒரு புறம் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் முடிக்கும் தருவாயில் இருக்கும், மறு புறம் ஒரு குழந்தை மீது உங்களுக்கு பொறுப்பு வருவதற்கு முன்னரே நிதி ஸ்தீரதன்மை இருக்க வேண்டும் என்பது பொருள். முன்பு பெரும்பாலான திருமணங்கள் பதிவுசெய்யபடவில்லை, பெரும்பாலான நகரபுற திருமணங்கள், திருமணம் நடைபெறும் மண்டபங்களிலே முறையாக பதிவு செய்யப்படுகின்றன, ஒரு திருமணம் சட்டபூர்வமாக முறைப்படுத்தப்பட்டவுடன், பல சட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. சில பழமைவாய்ந்த திருமண நிதி நிபந்தனைகள் இன்றும்கூட உண்மையாக பின்பற்றப்படுகின்றன. அவைகள் பின்வருமாறு: தம்பதியினர் இருவரும் குறைந்தது ஒரு கூட்டு வங்கி கணக்கு வைத்திருத்தல். குறிப்பாக, முதலீடு செய்யும் போது அல்லது இருவரும் சேர்ந்து கடன் பெறும்போது இது மிகவும் உதவியாக இருக்கும்.
பண மேலாண்மை
நிதி திட்டமிடல்
செலவுகள்
பணி ஓய்வு
திருமணம்
பண நிபந்தனைகள்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications