சீனாவின் பொருளாதார நிலை என்ன?? 10 வருட போராட்டம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: கடந்த பத்து வருடங்களில் உலகத்தில் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் நடந்துள்ளது. பொருளாதாரம் சார்ந்த வகையில் பார்க்கும்போது பல நாடுகள் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் வளர்ந்துள்ளது இப்பட்டியலில் இந்தியா, சீனா, போன்ற நாடுகளும் உண்டு. உலகின் மிகப் பெரிய வணிக சக்தியாக உருவெடுத்துள்ள சீனாவின் வளர்ச்சியில் தற்போது மெதுவான போக்கு நிலவி வருகிறது.

 

சீனா தனது வளர்ச்சியை சென்ற ஆண்டு 7.7% என பதிவு செய்தது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மெதுவான வளர்ச்சியை பதிவு செய்து கொண்டு வருவதால் கடந்த திங்களன்று சீன அரசு விடுத்துள்ள எச்சரிக்கையில் உயர்ந்திருக்கும் உள்நாட்டு அரசு கடன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஆழமாக நாட்டில் வேரூன்றி விட்டதாக தெரிவித்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி

அக்டோபர் - டிசம்பர் காலாண்டு முடிவில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவிதம் அடைந்ததாக தேசிய புள்ளி விபர குழு தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய பதிவான 7.8%-லிருந்து குறைந்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

மந்தமான வளர்ச்சி

மந்தமான வளர்ச்சி

2013 -ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருக்க மதிப்பு, 2012-ல் காணப்பட்ட அதே அளவாக இருந்தது. 1999 -லிருந்து பதிவான உள்நாட்டு பெருக்க மதிப்புகளை பார்க்கும்போது, இது மிக மோசமான வளர்ச்சி பதிவாகும். பிரஞ்சு நாளிதழின் 14 பொருளாதார வல்லுநர்களின் ஆய்வின்படி சராசரி முன்னறிவிப்பு மதிப்புடன் பொருந்துகிறது என தெரிவித்துள்ளது. மேலும் வளர்ச்சி வீதம் 7.5% என்று நிர்ணயிக்கபபட்டுள்ள அரசின் வளர்ச்சி இலக்கினை மேலும் அதிகரித்துள்ளது.

தேசிய புள்ளி விபர குழு
 

தேசிய புள்ளி விபர குழு

பொதுவான கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது சீனாவின் பொருளாதாரம் ,தொழில்துறை நிறுவனங்கள், உற்பத்தி, சில்லறை விற்பனை, அசையும் சொத்துக்களில் முதிலீடு இவற்றின் நேர்மறையான வெளியீட்டு அறிக்கை நல்ல வளர்ச்சியை காட்டுகிறது என்றும், சீனாவின் பொருளாதாரம் உத்வேகத்துடன் கூடிய, நிலையான மீதமான வளர்ச்சியை காட்டுகிறது என்றும், இது கடினமாக முயன்று அடைந்த சாதனையாகும் என்றும் தேசிய புள்ளி விபர குழுவின் தலைமை அதிகாரி மா ஜி டாங் (Ma Jiantang) தெரிவித்தார்.

சரியான திட்டங்கள் தேவை

சரியான திட்டங்கள் தேவை

சீனாவின் பொருளாதாரம் மோசமான காலகட்டத்தில் உள்ளது, நாட்டின் ஆழமாக வேரூன்றி விட்ட பிரச்சனைகள் களையப்பட வேண்டி உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் போட்டி

அமெரிக்காவுடன் போட்டி

1980-லிருந்து கம்யூனிச கட்டளைகளை குலைய செய்து நாட்டில் சந்தை சீர்திருத்தத்தை ஏற்படுத்தி பல ஆண்டுகளாக புரையோடிப் போயிருந்த நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்தது. இது மொத்த உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்தி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறி, உலகின் மிகப்பெரிய வணிக சக்தியாக மாற வழி செய்தது. ஆனால் சீனா, நாட்டின் மெதுவான வளர்ச்சியை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.'

அடுத்தப்படி!!

அடுத்தப்படி!!

உயர்ந்த மற்றும் பயனற்ற முதலீட்டை நாட்டில் செய்வதற்கு பதிலாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரிடம் எடுத்து செல்லும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவரான ஜி ஜின்பிங் (Xi Jinping) தெரிவித்தார்.

7.5 சதவீதம் மட்டுமே

7.5 சதவீதம் மட்டுமே

AFP -ன் பொருளாதார வல்லுநர்களின் ஆய்வில் 2014 -ஆம் ஆண்டுக்கான சராசரி முன்னறிவிப்பு மதிப்பு 7.5%-க்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's GDP growth at 7.7 per cent, declines to 14-year low

China's economy last year registered flat growth of 7.7 percent, maintaining its slowest expansion in more than a decade as the government warned.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X