இன்போசிஸ் மீதான முதலீட்டை அதிரடியாய் குறைக்கும் எல்ஐசி..

மும்பை: அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுவாக அனைத்து துறை நிறுவனங்களிலும் பங்கு வாயிலாக முதலீடு செய்து இருக்கும். இந்த முதலீட்டின் மூலம் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை உயர்த்துவதன் முலம் பங்கு விலைகளும் அதிகரிக்கும். இதனால் பிற நிறுவனங்களும் சரி எல்ஜசி நிறுவனமும் அதிகப்படியான லாபத்தை அடைந்து வந்தது.

இந்நிலையில் எல்ஜசி நிறுவனத்திடம் இருந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளை 3.71 சதவீதமாக குறைத்து கொண்டு சுமார் 2,600 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றது.

இன்போசிஸ் மீதான முதலீட்டை அதிரடியாய் குறைக்கும் எல்ஐசி..

நாட்டின் பங்குச் சந்தையில் மிகப்பெரும் நிறுவன முதலீட்டாளரான எல்ஐசி, கடந்த ஜுலை-செப்டெம்பர் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளை 4.71 சதவிகிதமாக தன் இருப்பில் வைத்திருந்தது. பங்குச்சந்தை தகவல்களின் படி கடந்த டிசம்பர் மாத முடிவில் 3.71 சதவிகிதமாகக் குறைந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டு குறைப்பு இந்த காலாண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜுன் காலாண்டில், நாட்டின் இரண்டாவது பெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் எல்ஐசி-யின் பங்கு 6.72 சதவிகித அளவிற்கு இருந்தது.

தற்போதுள்ள சந்தை நிலவரங்களின் படி, எல்ஐசி செய்திருக்கும் இந்த 1.24 புள்ளிகள் முதலீட்டுக் குறைப்பு சுமார் 2600 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பு பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் பங்குகள் மதிப்பு ரூபாய் 2,200 என்ற அளவிலிருந்து நன்கு வளர்ந்து ரூபாய் 3,760 என்ற அளவிற்கு கடந்த 10 மாதங்களில் உயர்ந்துள்ளது. கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவான ரூபாய் 3759.90 என்ற உயரத்தைத் தொட்டு பின்னர் சற்று குறைந்து ரூபாய் 3728 என்ற அளவில் மும்பை பங்குசந்தையில் முடிவடைந்தது.

கடந்த இரு மாதங்களாக, இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் உயரதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியளிக்கும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஜூன் மாதம் தன் மகன் ரோஷனை உதவியாளராக்கிக் கொண்டு நாராயணமூர்த்தி பதவிக்கு திரும்பியது முதல், கடந்த காலாண்டில் வெளியேறிய ஐந்து உயரதிகாரிகள் உட்பட, 8 மிக முக்கிய அதிகாரிகள் வெளியேற்றத்தை அந்நிறுவனம் கண்டது.

கடந்த மாதம், இன்ஃபோசிஸ் நிறுவன பிபீஒ வர்த்தகத்தின் மூத்த துணைத்தலைவர் சுப்ரமண்யம் கோபராஜு பதவி விலகியது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து பாலகிருஷ்ணன். (முதலீட்டு குறைப்பிற்கு இது தான் காரணமோ..)

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+