சென்செக்ஸ் 21337.67 புள்ளிகளைத் தொட்டது!! என்ன காரணம்??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் எஸ்&பி சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் நேற்று மதியத்திற்குப் பிறகு வேகமெடுக்கத் தொடங்கி சுமார் 87 புள்ளிகள் (0.41 சதவிகிதம்) உயர்ந்து இந்த நிதியாண்டில் எப்போதும் பதிவாகாத அளவான 21337.67 புள்ளிகளைத் தொட்டது.

இதற்குமுன் எட்டப்பட்ட உச்சக் கட்ட உயர்வு கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 21326.42 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.

நாள் முழுவதும் அதிகபட்ச நிலை புள்ளிகளுடன் பதிவானதும் அதாவது 21326.42 புள்ளிகளோடு பதிவானதும் அதே நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த உயர்வு?? வரலாற்றில் இந்த புதிய உயரங்களை பங்குச்சந்தைப் புள்ளிகள் அடைந்த்தற்கான காரணங்களை இந்த பக்கத்தில் பார்ப்போம். பொதுவாக பங்கு சந்தை என்பது நாட்டை சார்ந்தது மட்டும் அல்ல உலகத்தின் ஒட்டுமொத்த வர்த்தகதை சார்தே அமைகிறது.

உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு

உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு

சீனாவின் மத்திய வங்கி இந்த வார துவக்கத்தில் நிதி நிலையை மேலும் இலகுவாக்க அதாவது அதிக பணப்புழக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தது.

"இந்த முடிவு கடன் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சீனப் பொருளாராதரத்திற்கு தடையின்றி பணம் கிடைப்பதை உறுதிசெய்யும்" என ஐஜி மார்கெட் நிறுவன வல்லுநரான இவான் லூகாஸ் தெரிவித்ததாக ரியுடர்ஸ் செய்திக் குழு தெரிவித்துள்ளது.

 

 

3ஆம் காலாண்டு முடிவுகள்

3ஆம் காலாண்டு முடிவுகள்

மற்ற நாட்டுகளை ஒப்பிடுகையில் பெரும் வித்தியாசத்துடன் இந்திய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி முடிவுகள் அனைவராலும் பாரட்டத்தக்க வகையில் இருந்தது.

இதில் முக்கியமாக பங்கு பெற்றது ஐடி துறை தான். அமெரிக்க டாலருக்கு ஏதிராக இந்தியா ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் ஐடி நிறுவனங்களின் லாப விகிதம் சற்று அதிகமானது என்றே கூறலாம். இந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்விசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை எதிர்ப்பார்த்ததை விட நன்கு செயலாற்றின.

 

 

வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த பணவீக்கம்
 

வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த பணவீக்கம்

வியக்கத்தக்க வகையில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கக் குறியீட்டு அளவு 6.16 சதவிகிதமாக பதிவானது.

இந்த அளவு ஏற்றுக்கொள்ளத்தக்க அளவான 7 சதவிகித்திற்கும் மற்றும் கடந்த 5 மாதங்களில் பதிவான அளவினை விடவும் குறைவாகும். குறைந்த பணவீக்கம் ஒரு பெரும் சாதகமான அம்சமாக இருந்ததுடன் ரிசர்வு வங்கியின் கொள்கை முடிவுகள் கூட்டத்திற்கு முன்பாகவே நிகழ்ந்தது.

 

 

அமெரிக்கவின் நிதி உந்துதல் திட்டம்

அமெரிக்கவின் நிதி உந்துதல் திட்டம்

அமெரிக்கவில் டிசம்பர் மாதம் பதிவான வேலையற்றோர் எண்ணிக்கை சதவிகிதம் 6.7 ஆக அதாவது அதற்கு முந்தைய மாத அளவான 7 சதவிகித்திலிருந்து சற்று குறைந்ததிருந்தது. இந்த அளவு எதிர்பார்ப்பை விட குறைந்திருந்தாலும் இது அந்நாட்டுக் கருவூலத்திற்கு ஒரு நல்ல செய்தியாகும். ஏனெனில், அதன் கடன் பத்திர வருவாய் 2.96 சதவிகித்திலிருந்து 2.86 சதவிகிதமாக்க் குறைந்தது. அமெரிக்காவின் திறந்த சந்தை கொள்கை திட்டங்களைப் பொருத்தவரை இது ஒரு நல்ல தகவல் தான். எனவே அந்நாடு நிதி சம்ன்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவதில் சற்று சிரமம் இருந்தது இந்திய பொருளாதராம் அல்லது வளரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது.

எச்சரிக்கை மணி

எச்சரிக்கை மணி

3 சதவிகித வருவாய் என்பது இந்திய சந்தை மற்றும் நாணய மதிப்பிற்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். ஏனெனில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்யாமல் அமெரிக்காவிலேயே வைத்துக்கொள்ள முயல்வர்.

எனினும் இந்த தகவல்கள் அமெரிக்க அரசின் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

2014 தேர்தல்கள்

2014 தேர்தல்கள்

கடந்த ஆண்டு பங்குச் சந்தை பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சற்று உறுதியுடன் இருந்தபோது, ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் அதை குலைக்கும் வகையில் இருந்தது.

இந்த கவலைகள் பெரும்பாலும் டெல்லியைப் போல் தேர்தல் முடிவுகளையொட்டி எழுந்தாலும் இவை பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex makes record closing high; five reasons

The S&P BSE Sensex gained momentum in late afternoon trade and closed the day recording its all-time closing high of 21,337.67; up 87 points, or 0.41%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X