கொல்கத்தா: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சர்வதேச புகழை பிரதிபலிக்கும் வகையில் பசிபிக் பகுதியில் உள்ள பலாவ் நாடு (Palau) நாணயம் சேகரிப்போருக்காக சிறப்பு நாணயத்தை வெளியிடவுள்ளது.
ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்கள் மற்றும் ஒரு சிறிய வைரக்கல் பதித்த இந்த வெள்ளி நாணயங்கள் ஜெர்மனி நாட்டின் கருவூலத்திலிருந்து பெறப்பட்டு கொல்கத்தாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக நாணய வல்லுநரும் இந்த நாணயங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட முகவருமான அலொக் கோயல் தெரிவித்தார்.

திருப்பதி பாலாஜி என்று பரவாலாக அறியப்படும் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலுக்கு வருடந்தோரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து கடவுளுக்காக நாணயம் வெளியிட வெளிநாடு ஒன்று ஈடுபட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
நாணயத்தை அந்நாடு வெளியிட்டாலும், அதற்கான வடிவமைப்பை செய்தது மென்பொருள் ஆலோசகரான கோயல் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தவணையாக ஒரு அவுன்ஸ் எடையுடன் ரூபாய் 11,111 என விலையிடப்பட்டுள்ள 1,111 நாணயங்களை மட்டுமே அந்நாடு வெளியிடவுள்ளது.
இந்த நினைவு நாணயங்களின் முகப்பு மதிப்பு 5 மற்றும் 20 அமெரிக்க டாலர்களாக இருப்பதோடு இவை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி அதாவது புனித நாளான சித்திரா பவுர்ணமி அன்று வெளியிடப்படவுள்ளது என்று கோயல் தெரிவித்தார்.
இந்த நாணயங்கள் கோவில் வடிவில் அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் வைக்கப்பட்டு எல்ஈடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.
கோயலின் ஏஜி இம்பெக்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நாட்டு நிறுவனமான "காயின் இன்வெஸ்ட் டிரஸ்ட் என்ற நிறுவனத்தோடு இணைந்து சிறப்பு வாய்ந்த நாணயங்களை உலகம் முழுவதும் சந்தைப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications