சென்னை: முன்னணி செல்போன் உற்பத்தியாளரான சாம்சங் நிறுவனதின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துடனான காப்பீட்டு வழக்குகள் மூலம் சாம்சங் நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் சரிந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம், வியாபாரம் என அனைத்தும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 'காலாண்டு நிகர லாபம் முந்தைய காலாண்டில் இருந்தததை விட குறைந்தது, தென் கொரிய மின்னணு நிறுவனமான, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ஸ்மார்ட்போன் சந்தைகளில் மெதுவான வளர்ச்சி பற்றி ஆழ்ந்த கவலைகளுக்கு மத்தியில் உள்ளதாக, கூறினார்.
11% சரிவு..
கேலக்ஸி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இந்த நிறுவனம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான நான்காவது காலாண்டிற்கான நிகர வருவாய் அதன் மூன்றாவது காலண்டின் வருவாயை விட, 11 % குறைந்து. கடந்த 9 காலாண்டுகளின் நிகர லாபத்தை பார்க்கும்போது, இந்த காலாண்டில் தான் முந்தைய காலாண்டின் லாபத்தை விட லாபம் குறைந்து என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது.
சந்தையின் வீழ்ச்சி..
வீழ்ச்சியடைந்த சந்தையின் தேவைகள் குறைந்ததன் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளும் அதாவது லாபமும் குறைந்தது. பன்னாட்டு நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஃபாக்ட்செட் (FACTSET) தேர்ந்தெடுத்த ஆய்வாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் லாபம் 7.5 டிரில்லியன் வொன் லாபம் எதிர்ப்பார்த்தனர், ஆனால் நிறுவனத்தின் வர்த்தகம் ஏமாற்றியது. வொன் என்பது தென் கொரிய நாட்டின் நாணயம்.
என்னதான் காரணம்
வொன் நாணயத்தின் கடுமையான நிலை, கேலக்ஸி சாதனங்கள் பிரபலப்படுத்த செய்த செலவுகள் மற்றும் ஒரு முறை செலவுகள் ஆகியவற்றின் காரணமாக லாபம் குறைந்தது என சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ (Samsung Electronics Co ) கூறுகிறது.
ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி
எதிர்பார்த்ததை விட பலவீனமான வருவாய் அடைந்த நிலையில் சாம்சங் நிறுவனத்தின் லாப வளர்ச்சி, முடிவுக்கு வரும் என்ற யூகத்தினை அதிகமாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் தான் உலகின் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஜம்பவான் என போற்றப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் மறைமுகமாகவும், வெளிபடையாகவும் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.
விற்பனை..
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு விற்பனை 59.3 டிரிலியன் -ஆக இருந்தது. இது முந்தய காலாண்டின் விற்பனை மதிப்பிலிருந்து மாறாத ஒன்று.
ஐடி மற்றும் கம்யூனிகேசன் பிரிவு
கடந்த சில காலாண்டுகளில் 70% லாபத்தினைஅளித்த சாம்சங் ஐடி மற்றும் கம்யூனிகேசன் பிரிவு, தனது முந்தய காலாண்டின் லாபமான 6.7 டிரில்லியன் வொனிலிருந்து 5.5 டிரில்லியன் வொனாக-ஆக குறைந்துள்ளது.
இந்த காலாண்டும் இப்படிதான்..
ராபர்ட் யி , முதலீட்டாளர்களின் தொடர்பாளர் தலைவர் கூறுகையில் தொலைக்காட்சி ஆகியவற்றின் வணிகம் பலவீனமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டினல் வருவாயை அதிகரிப்பது நிறுவனத்திற்கு கடினம் என்றார். மேலும் இந்த ஆண்டிற்கான மூலதன செலவு கடந்த 2013-ல் இருந்த அதே அளவாக இருக்கும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications