டெல்லி: அதிவிரைவு சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு (expressway projects) உள்நாட்டுச் சந்தை நிறுவனங்கள் முதலீடுகளைத் திரட்ட இயலாது என்ற அச்சத்தால் மூன்று மிகப்பெரும் சாலை திட்டங்களுக்கு சுமார் ரூபாய் 25,000 கோடி பெருமானமுள்ள அன்னிய முதலீடுகளை மத்திய அரசு எதிர்ப்பார்கிறது.
இத்திட்டங்களில் 135 கி.மீ. நீளமுள்ள கிழக்கு எல்லைப்புற அதிவிரைவு சாலை, 64 கி.மீ. நீளமுள்ள டெல்லி-மீரட் மற்றும் 379 கி.மீ. நீளமுள்ள மும்பை-வடோரா அதிவிரைவு சாலைகள் அடங்கும்.
நெடுஞ்சாலைகள் துறை செயலர் விஜய் சிப்பருடன் நடந்த ஒரு சந்திப்பில், ஜப்பான், சீன, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற தான் அதிகாரிகாளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
வங்கி கைவிரித்தது..
நல்ல வருமானத்திற்கான வாய்ப்புகள் இருந்தும் இந்திய வங்கிகளோ அல்லது நிறுவனங்களோ இத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தர முன்வரவில்லை.
நிதியை திரட்ட அன்னிய முதலீடு
இதனால் இந்தியாவில் நிதி திரட்ட முடியாத நிலையில், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற முடிவு செய்துள்ளோம். ஏனெனில் திட்டங்களுக்கான இந்திய முதலீட்டு ஆதாரங்கள் வற்றியுள்ளன என சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சக முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திட்ட விழிப்புணர்வு
அன்னிய முதலீகளை பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இந்த திட்டங்களைப் பிரபலப்படுத்தி முதலீடுகளைப் பெற பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வலிமையான பங்கிடு தேவை
இந்தத் திட்டங்களுக்கான சலுகைக் காலம் 30 வருடங்கள், மேலும் முன்வைக்கப்படும் போக்குவரத்தின் அளவு அதிகம் என்பதால் நாங்கள் ஒரு வலிமை வாய்ந்த பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
விளம்பரம் அவசியம்
வங்கிகளின் ஆர்வமற்ற தன்மையினால், தற்போது ஏலத்தை மேற்கொண்டுள்ளோம். மேலும் அன்னிய முதலீட்டில் கிடைக்கும் தகுந்த உள் வருவாய் விகிதம் அதிகம் என்பதால், ஏலத்திற்கு முன் திட்டங்களைக் குறித்த ஒரு நல்ல உலகளாவிய விளம்பரங்கள் அவசியம் எனவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications