சர்வதேச அழைப்புக்கு இப்போது ஒரு வினாடிக்கு ஒரு பைசா மட்டுமே!! ஏர்செல்லின் சூப்பர் ஆஃபர்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: தொலைதொடர்பு நிறுவனங்கள் வியாபார போட்டியின் காரணமாக சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை குறைத்துள்ளன. இப்போட்டியில் ஏர்செல் நிறுவன தன் வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக ஒரு வினாடிக்கு ஒரு பைசா திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் மேலும் பல நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தினை குறைக்க முற்ப்பட்டுள்ளனர்.

 

கடந்த இரண்டு வருட காலகட்டத்தில் உள்நாட்டு அழைப்பு கட்டணம் உயர்வடைந்துள்ளது. மேலும் இலவச சேவை வழங்குவதையும் தொலை தொடர்பு இயக்குநகரங்கள் ஒதுக்கி வைத்துள்ளன. இதனிடையில் சர்வதேச அழைப்புகளான வெளிநாட்டு அழைப்புக்கான கட்டணம் குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. தொலை தொடர்பு நிறுவனங்களுக்கிடையே அதிகரித்து வரும் வியாபார போட்டியே இதற்கு காரணமாகும்.

ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம்

ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம்

முன்நிர்ணய அடிப்படையில் அழைப்புகளுக்கான கட்டணமாக ஒரு பைசாவிற்கு ஒரு விநாடி வழங்கும் திட்டத்தினை கடந்த வியாழன் அன்று ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் துவங்கியது.

நிம்‌பஸ்

நிம்‌பஸ்

முன்னதாக நிம்‌பஸ் (Nimbuzz) இணைய நிறுவனம், சர்வதேச அழைப்புகளை அழைக்கும் உள்நாட்டு உபயோகிப்பாளர்களுக்கு ஒரே மாதிரியான கட்டண முறையை கொண்டு வந்துள்ளது.

கூடுதல் கட்டணம் எதும் இல்லை..

கூடுதல் கட்டணம் எதும் இல்லை..

இந்த முன்நிர்ணய கட்டண திட்டத்தின் மூலம், தொலை தொடர்பு நாடுகளான கனடா, சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு (நிலையான இணைப்பின் மூலம்) சர்வதேச அழைப்புகளை இயக்க ,எந்த ஒரு கூடுதல் கட்டணத்தினையும், வசூலிக்காமல் ஒரு வினாடிக்கு ஒரு பைசா மட்டும் வசூலிக்கும் திட்டத்தினை ஏர்செல் நிறுவனம் வழங்கியுள்ளது.

1.5 பில்லியன் டாலர்
 

1.5 பில்லியன் டாலர்

சர்வதேச அழைப்புகளை இயக்க, அழைப்பாளர் முதலில் ஒரு நான்கு இலக்க எண்ணினை அழுத்தி விட்டு, அதை தொடர்ந்து குறிப்பிட்ட மொபைல் எண்ணினை அழுத்த வேண்டும். நிம்‌பஸ் நிறுவனம் நடத்திய உள்நாட்டு ஆய்வு, இந்தியாவில் 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு சர்வதேச அழைப்பு வர்த்தகம் நடைப்பேற்கிறது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள்

சர்வதேச நாடுகள்

ஏர்செல் நிறுவனத்தின் கருத்து படி இந்தியாவிலிருந்து, செய்யப்படும் சர்வதேச அழைப்புகளில் அமெரிக்கா, கனடா, சீனா, சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளுக்கு செய்யப்படும் அழைப்புகள் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆகிய நாடுகளுக்கு செயப்படும் அழைப்புகள் தான் அதிகம் என்றும், இந்த நாடுகளுக்கான அழைப்பு கட்டணம் 35% என்றும் ஏர்செல் நிறுவனம் தெரிவிக்கிறது.

பொருளாதார நிலை

பொருளாதார நிலை

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சி, வணிக விஷயமாக உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையில் ஆச்சரியத்தக்க அளவில் எழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக போட்டியில் எடுப்பட்டுள்ள தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் தரும் முதன்மையான காரணிகளுள் இதுவும் ஒன்று என அமித் சச்தேவா கூறினார்.

வோடஃபோன்

வோடஃபோன்

சென்ற வருடம் ,வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் சர்வதேச ரோமிங் அழைப்புக்கான கட்டணத்தை பெருமளவு குறைத்துள்ளது. தரவு கட்டணத்தில் 95% கட்டண குறைப்பினையும்,குரல் அழைப்புக்கான கட்டணத்தில் 75% கட்டண குறைப்பினையும் உள்ளடக்கிய திட்டத்தினை வோடஃபோன் நிறுவனம் வழங்குகிறது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

அனைவருக்கும் முன்னரே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அமெரிக்காவுக்கான தனது ரோமிங் அழைப்பு கட்டணத்தினை குறைத்துள்ளது. இந்தியாவிலிருந்து செய்யப்படும் தனித்துவம் நிறைந்த சில மாற்றங்கள் காணப்படுகின்றன.

உலகம் முழுவதிலும் இந்தியா..

உலகம் முழுவதிலும் இந்தியா..

இந்திய நாடு குடும்பங்கள், நண்பர்கள், வணிகம் என்கிற முறையில் உலகம் முழுவதும் பரவி விரிந்துள்ளது. இந்திய குடும்பங்கள் உலகமயமாக்கப்பட்டுள்ளன. சுமார் 3 கோடி இந்தியர்கள், இந்தியாவை விட்டு வெளி நாடுகளில் இன்று வசிக்கின்றனர் என்று நிம்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனா செய்தி பிரிவு இணையதளமான dna-விடம் தெரிவித்தார்.

1500 கோடி நிமிடங்கள்

1500 கோடி நிமிடங்கள்

முன்னணி நிறுவனங்கள் ஆண்டுதோறும் 1500 கோடி நிமிடங்களிலான சர்வதேச அழைப்புகளை உருவாக்குகின்றன என்ற உண்மையின் மூலம் இந்த சந்தையின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now, make international calls for as low as one paisa per second

While domestic calls have become expensive over the couple of years with telecom operators doing away with freebies, international call rates are falling due to rising competition between players.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X