தொடர்ந்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரிகள்!! கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருக்கும் இராஜேஷ் வர்மா, பதவியில் இருந்து விலகப் போவதாக பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் இரண்டு பேர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த பதவி விலகலை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாதா என்று தெளிவாக தெரியவில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்-ன் செய்தி தொடர்பாளரும் எந்தவித கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை. மேலும் 'வர்மா டெல்லியைச் சேர்ந்த ஒரு மருத்துவ துறை நிறுவனத்தின் தலைவராக இருந்தார்' என்று முன்பு சில பேர் குறிப்பிட்டிருந்தனர்.

தலைமை பயிற்சியாளர்

தலைமை பயிற்சியாளர்

இந்நிறுவனத்தில் நெடுங்காலமாக பணி புரிந்து வருபவர்களில் ஒருவராக இருக்கும் வர்மா, ஜுன் 2006 முதல் கிரௌன்டட் ஏர்லைன் பிரிவில் உள்ளார். ஏர்லைனிலிருந்து இரயிலுக்கு செல்லும் கேபின் குழுவினருக்கும் மற்றும் இதர பணியாளர்களுக்கும் பயிற்சி மையத்தை அமைப்பதில் இவர் பெரும் பங்கு வகித்துள்ளார். அவர் கிங்பிஷர் டிரெய்னிங் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

அவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் சேருவதற்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மற்றும் இன்-பிளைட் சர்வீசஸ் பிரிவின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.

ஹிதேஸ் படேல்
 

ஹிதேஸ் படேல்

மே மாதத்தில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருந்த ஹிதேஸ் படேல் பதவி விலகினார். ஆகஸ்ட் 2004ஆம் ஆண்டில் கிங்பிஷரில் வேலைக்கு சேர்ந்த படேல், 2005-ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் சர்ட்டிபிகேஷன் பெற்ற குழுவில் முன்னணி பொறுப்பாளராக இருந்தார்.

இரகுநாதன் மட்டுமே

இரகுநாதன் மட்டுமே

வர்மா வெளியேறுவதைத் தொடர்ந்து, கிங்பிஷர் நிறுவனத்தில் தற்போதைய முதன்மை நிதி அலுவலராக இருக்கும் A.இரகுநாதன் மட்டுமே உயர் பதவியில் இருப்பார்.

உரிமம் ரத்து

உரிமம் ரத்து

விஜய் மல்லையாவினால் பெறப்பட்ட விமான சேவை இயக்கத்திற்கான அனுமதி, விமான போக்குவரத்துக்கான பொது இயக்குநரகத்தால் (Directorate General of Civil Aviation) அக்டோபர் 2012-ல் இரத்து செய்யப்பட்டது.

ஊழியர்களின் வேலை நிறுத்தம்..

ஊழியர்களின் வேலை நிறுத்தம்..

உரிமம் ரத்து மற்றும் ஊதிய நிலுவை காரணமாக விமான சேவை நிறுவன பணியாளர்களின் வேலை நிறுத்தம் இருந்தது. இந்நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகிவிட்டாலும், இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் புதுப்பிக்க இயலும். 2005-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கிங்பிஷர் நிறுவனம் இலாபம் ஈட்டியதில்லை.

காசு, பணம், துட்டு, மனி, மனி..

காசு, பணம், துட்டு, மனி, மனி..

கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்தவர்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உட்பட அனைவரும் UB குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களில் பங்குகளையும் மற்றும் விமான சேவை நிறுவன தலைமையகத்தின் விற்பனை செய்ய உறுதியாக இருந்தனர். அவர்கள் தங்களுடைய கடன்களை திரும்ப பெறுவதற்காக இந்த நடவடிக்கைகளை செய்ய நினைத்தனர்.

கண்ணு வேற்குது..

கண்ணு வேற்குது..

முடியல கண்ணு கட்டுது... அழுது புலம்பும் விஜய் மல்லையா...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher Airlines executive vice-president Rajesh Verma quits

Rajesh Verma has resigned as executive vice-president of the grounded Kingfisher Airlines Ltd, said two company executives who didn’t want to be named.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X