மொபைல் விளம்பரங்களின் வருமானம் 92% வளர்ச்சி!! டீன்ஏஜ் வாடிக்கையாளர்கள் சரிவு பேஸ்புக்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: சமுகவலை தள நிறுவனமான பேஸ்புக் இன்க் மொபைல் விளம்பர வர்த்தகம் தொடர்ந்து துரிதமாக நடைபெற்று வருவதினால் இந்நிறுவனம் வால் ஸ்ட்ரீட் இலக்குகளை பின்தள்ளி வலுவான வருவாய் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் கடந்த புதன்கிழமையன்று வர்த்தகத்தில் சுமார் 12% என்ற வீதத்தில் 59.98 டாலர் வரை உயர்ந்துள்ளது.

 

மூன்றாவது காலாண்டின் போது மொத்த விளம்பர வருவாயில் சுமார் 49 சதவீதமாக இருந்த மொபைல் விளம்பர வருவாய் வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் சுமார் 53 சதவீதமாக, அதாவது 1.24 பில்லியன் டாலராக இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"அவர்கள் மொபைல் விளம்பரத்தின் சூட்சுமத்தை நன்கு அறிந்து கொண்டு விட்டார்கள்" என்று ஸ்டெர்ன், அகீ & லீச் நிறுவனத்தின் ஆய்வாளரான அரவிந்த் பாட்டியா கூறியுள்ளார். விளம்பர வருவாயை பொறுத்தவரை, "ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் டெஸ்க்டாப்பின் இடத்தை மொபைல் பிடித்து விட்டது," என்றும் அவர் கூறியுள்ளார்.

1.23 பில்லியன் வாடிக்கையாளர்கள்

1.23 பில்லியன் வாடிக்கையாளர்கள்

தற்சமயம் சுமார் 1.23 பில்லியன் மாதாந்திர வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அவர்களுள் 945 மில்லியன் பேர் ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லெட் மூலம் இந்நிறுவனத்தின் சேவைகளை உபயோகித்து வருவதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

 நியூஸ்ஃபீட்

நியூஸ்ஃபீட்

கட்டணம் செலுத்த வேண்டியதான மார்க்கெட்டிங் மெஸ்ஸேஜ்களை வாடிக்கையாளர்களின் நியூஸ் அண்ட் கன்டென்ட் ஸ்ட்ரீமிற்குள் நேரடியாக புகுத்தக்கூடியதான ஃபேஸ்புக்கின் நியூஸ்ஃபீட் விளம்பரங்கள், ஃபேஸ்புக்கின் வருவாயையும், அதன் பங்கு விலையையும் சமீப மாதங்களில் உயரச்செய்துள்ளன. இந்த விளம்பரங்கள் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் இதர மொபைல் சாதனங்களின் குட்டித் திரைகளுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

92% உயர்வு
 

92% உயர்வு

பேஸ்புக்கில் வரக்கூடிய விளம்பரங்களுக்கான பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 8% ஆக குறைந்திருந்த போதிலும் விளம்பரம் ஒன்றிற்கான சராசரி விலை கடந்த ஆண்டில் 92% ஆக உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தரம் உயரும்

தரம் உயரும்

கடந்த புதன்கிழமையன்று ஆய்வாளர்களுடன் நிகழ்ந்த கான்ஃபரன்ஸ் கால் மீட்டிங்கின் போது, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான மார்க் ஸுகர்பெர்க், இனி வரும் ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் நியூஸ் ஃபீட்டில் வரக்கூடிய விளம்பரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் காட்டிலும் நியூஸ்ஃபீட் விளம்பரங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதிலேயே தாங்கள் அதிக கவனம் செலுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாண்ட்-அலோன் புராடக்ட்கள்

ஸ்டாண்ட்-அலோன் புராடக்ட்கள்

வரும் ஆண்டிற்கான இதர முன்னுரிமைகளுள், புதிய ஸ்டாண்ட்-அலோன் புராடக்ட்களின் உருவாக்கத்திலும், ஃபேஸ்புக்கின் நாஸென்ட் ஸர்ச் புராடக்ட்டின் மேம்பாட்டிலுமே தங்கள் நிறுவனம் கவனம் செலுத்தப் போவதாக ஸுகர்பெர்க் கூறியுள்ளார்.

தினசரி உபயோகம் அதிகரிப்பு

தினசரி உபயோகம் அதிகரிப்பு

இள வயது பதின்ம வயதினரிடையே தினசரி உபயோகம் குறைந்திருப்பதை அக்டோபர் மாதத்தில் ஃபேஸ்புக் கண்டறிந்து கூறிய போது அது சில முதலீட்டாளர்களை திகிலடையச் செய்தது. இந்த விமர்சனம் பதின்ம வயது வாடிக்கையாளர்கள் ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற புதிய மெஸ்ஸேஜிங் சேவைகளுக்கு மாறியிருக்கக்கூடும் என்ற பீதியை கிளப்பி விட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook revenue rises the most in two years helped by mobile ads

Facebook Inc. delivered its strongest revenue growth in two years, beating Wall Street targets as the Internet company’s mobile ad sales continued to accelerate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X