உலகில் படிப்பறிவற்ற மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா?? இந்தியா

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: லட்சக்கணக்கில் குழந்தைகளும், வயது வந்தோரும் இன்னும் படிப்பறிவின்றி இருக்கும் தற்போதைய சூழலில், 2015 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற தனது இலக்கிலிருந்து இவ்வுலகம் நழுவக்கூடிய சாத்தியத்தை படைசாற்றுவது போல் இருப்பதாக யுனைட்டெட் நேஷன்ஸ் (யுஎன்) அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

 

யுனைட்டெட் நேஷன்ஸ் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பல ஆய்வில் பல முக்கிய காரணிகளை மையமாக கொண்டு துவங்கப்பட்டது, இதன் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது என் இந்த அமைப்பு தெரிவித்தது. இதில் படிப்பறிவில்லாத மக்கள் எந்த நாட்டில் அதிகமுள்ளனர் என்ற ஆய்வும் அடங்கும்.

உலகில் இந்தியாவில் தான் படிப்பறிவில்லாத முதியோர்கள் அதிக அளவில் உள்ளனர், அதாவது உலகெங்கிலும் இவ்வாறு படிப்பறிவின்றி வாழும் மக்களின் எண்ணிக்கை 287 மில்லியனாக உள்ளது இது உலக மக்கள் தொகையில் சுமார் 37 சதவீதம் என்று யுனெஸ்கோவின் எஜுக்கேஷன் ஃபார் ஆல் (இஎஃப்ஏ) குளோபல் மானிட்டரிங் தகவலறிக்கை தெரிவிக்கிறது.

"2008 ஆம் ஆண்டில், ஈஎஃப்ஏ குளோபல் மானிட்டரிங் தகவலறிக்கை "அனைவருக்கும் கல்வி என்பதை சாதிக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்பியிருந்தது. 2015 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இத்தருணத்தில் அவ்விலக்கை எட்டுவது சாத்தியமன்று என்று அதே தகவலறிக்கை கூறுகிறது," என்று யுனைட்டெட் நேஷன்ஸ் எஜுக்கேஷனல், சயின்டிஃபிக் அண்ட் கல்ச்சுரல் ஆர்கனைஸேஷனின் (யுனெஸ்கோ) டைரக்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் ஐரினா பொக்கோவா, இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

129 பில்லியன் டாலர்

129 பில்லியன் டாலர்

பள்ளிக்குச் செல்வோரில், கணிசமான விகிதத்தினர் அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்வதில்லை என்றும் "அனைவருக்கும் கல்வி என்ற நெருக்கடியினால் உலகளவில் அரசுகளுக்கு வருடத்துக்கு சுமார் 129 பில்லியன் டாலர் செலவு ஏற்படுகிறது" என்றும் இத்தகவலறிக்கை கூறுகிறது.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டுவதில் உள்ள முக்கிய தடைகளுள் நிதிப்பற்றாக்குறையும் ஒன்றாகும் என்று உலகளாவிய பொருளாதார மந்தநிலையே இதற்கு காரணம் என்றும் இத்தகவலறிக்கை குற்றம் சாட்டுகிறது. நிதிப்பற்றாக்குறை சுமார் 26 பில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.

கல்விக்கான நிதி உதவி குறைவு
 

கல்விக்கான நிதி உதவி குறைவு

2011 ஆம் வருடம் வரையிலான கல்வி உதவி பற்றிய தகவலை வைத்திருக்கும் இந்த ஏஜென்ஸி, வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த உலகளாவிய கல்வி உதவி 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 14.4 பில்லியன் டாலர் என்ற அளவில் நிலையாக இருந்துள்ளதாகவும் அதற்குப் பிந்தைய ஒரு வருடத்தில் இது சரிந்து விட்டதாகவும் கூறியுள்ளது. "2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கல்வி உதவி சுமார் 1 பில்லியன் டாலர் வரை சரிவடைந்துள்ளது," என்று இஎஃப்ஏ 2013-14 கூறியுள்ளது.

இந்தியா

இந்தியா

கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கும் வகையில் தங்களின் வரித்திட்டங்களை மேம்படுத்திக் கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை யுஎன் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

சரியான திட்டங்கள் தேவை

சரியான திட்டங்கள் தேவை

மிகச்சிறப்பாக செயல்படக்கூடிய வரிவிதிப்பு அமைப்பானது, உள்நாட்டு நிதியைக் கொண்டு தங்களின் கல்வி அமைப்பை நன்கு ஆதரிக்கக்கூடிய ஆற்றலை அரசுகளுக்கு வழங்கவல்லது.

எகிப்து, இந்தியா, ஃபிலிப்பைன்ஸ்

எகிப்து, இந்தியா, ஃபிலிப்பைன்ஸ்

எகிப்து, இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நடுத்தரமான வருவாயுடன் கூடிய சில நாடுகள், தங்களின் மேம்படுத்தப்பட்ட வரி அமைப்புகளின் மூலம் கல்விக்கென உள்நாட்டு வளங்களை ஆயத்தப்படுத்துவதில் அதீத ஆற்றலுடன் திகழ்வதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India has the highest population of illiterate adults: Unesco

The world will miss its goal of universal education by 2015, with millions of children and adults still to be schooled, said a United Nations (UN) body.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X