துபாயில்... சொத்து குவிப்பில் இந்தியா முதல் இடம்!

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் முக்கியமான நாடாக விளங்குவது துபாய். இந்நாட்டின் முக்கிய வர்த்தகமாக கருதுவது கட்டுமானம், சுற்றுலா தளங்கள், ஹோட்டல் மற்றும் ரியல் ஸ்டேட் ஆகும். இந்நாட்டில் இந்தியா அதிகமான அளவில் வசித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டினர் மற்றும் கேளர மண்ணை சார்ந்தவர்கள் மிகவும் அதிகம்.

இந்நிலையில் கடந்த மாதம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது, துபாய் நாட்டில் யார் அதிகப்படியாக ரியல் ஸ்டேட் துறையில் ஈடுபடுகின்றனர் என்பதே இந்த ஆய்வு. இந்த ஆய்வு ஆண்டுதோறும் தவராமல் நடத்தப்படும்.

இந்த ஆண்டின் வருடத்தில் இரண்டாம் நாள் அன்றே இந்த சர்வே துவங்கியது. துபாய் நாட்டில் சொத்து வாங்கும் வெளிநாட்டினரில் பல நாடுகள் முன்வந்தாலும் அனைவரையும் ஒரம்கட்டிவிட்டும் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்தனர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான்

இங்கிலாந்து, பாகிஸ்தான்

இந்தியாவை அடுத்து இங்கிலாந்து, பாகிஸ்தான் நாடுகள் துபாயில் அதிகமாக சொத்து வாங்குவதாக தெரிய வந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை துபாயில் உள்ளதாக கருதுகின்றனர். எனவே அங்கு இத்துறையில் பிற நாட்டினரின் முதலீடு அதிகமாக உள்ளது.

காரணம்

காரணம்

துபாயில் மட்டும் பல ஆண்டுகளாக ரியல் ஸ்டேட் துறை சற்றும் மொசு குறையாமல் இருக்கிறது ஏன் இப்படி என்று பார்த்தால் பல காரணங்கள் கிடைக்கிறது. அதில் முக்கியமாக வெளிநாட்டு பயனிகள் அதிகளவில் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க துபாய் வருகின்றனர். முன்பெல்லாம் வெளிநாட்டினருக்கு பிடத்த இடம் கோவா, கேரள அகிய இடங்கள் என்பது குறிப்பிடதக்கது. மேலும் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் முக்கிய வர்த்தக கூட்டத்தை துபாய் நாட்டில் வைத்து நடத்துகின்றனர் என்பது மற்றும் ஒரு சிறப்பு, இன்னும் பல.

162 நாடுகள்

162 நாடுகள்

கடந்த 2013ஆம் ஆண்டில் சுமார் 162 நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாய் மண்ணில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கியுள்ளனர். மேலும் கடந்த வருடம் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் 3,100 கோடி டாலருக்கு சொத்து பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர். உள்நாட்டவரின் பரிவர்த்தனைகளையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த மதிப்பு 6,400 கோடி டாலர் வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

 

 

பிறநாட்டு முதலீடு

பிறநாட்டு முதலீடு

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் 120 கோடி டாலர் முதலீடும் வளைகுடா பகுதிக்கு வெளியே உள்ள அரேபியர்கள் 320 கோடி முதலீடும், ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் 7 கோடி டாலர் பங்குடன் முதலிடத்தில் உள்ளனர். அடுத்து லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+