பெய்ஜிங்: கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. அதிலும் மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஒரு 10 முதல் 15 ஆண்டுகள் முன் பார்த்தால் மொபைல் போனின் வடிவம் ஒரு செங்கலின் வடிவத்தை ஒத்து இருக்கும். ஆனால் இப்போது ஒரு பேனாவின் அளவைவிட சிறியதாக இருக்கிறது.
ஸ்மார்ட்போன் வருகைக்கு பின் இதன் வளர்ச்சி தாறுமாராக வளர்ந்தது. இதன் நிலை இப்போது என்ன? ஸ்மார்ட்போன் உபயோகிப்பவரிடம் கேட்டால் தெரியும். அவர்களிடம் கேட்டால் அரை மணி நேரத்திற்கு பின் தான் பதில் வரும். அந்த அளவிற்கு அடிமையாகி உள்ளனர். சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.

2013ம் ஆண்டில் சர்வதேச அளவில், ஸ்மார்ட்போன்களில் விற்பனை இந்த வருடம் உச்சத்தை தொட்டது. மக்களின் அமோக வரவேற்பினால் ஸ்மார்ட்போன் சந்தை மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இச்சந்தையில் முதன் முறையாக, 100 கோடியை தாண்டி வெற்றி நடைபோடுகிறது. சந்தை ஆய்வு நிறுவனமான ஐ.டீ.சி., வெளியிட்டுள்ள தகவலின் படி சர்வதேச மொபைல் போன் நிறுவனங்கள் சென்ற ஆண்டு, முதன் முறையாக 100.40 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன.
இச்சாதனை 2012ஆம் ஆண்டு விற்பனையை விட 38.4 சதவீதம் உயர்வாகும். சென்ற ஆண்டு, ஒட்டுமொத்த மொபைல் போன் விற்பனையில், 'ஸ்மார்ட் போன்'களின் பங்களிப்பு, 55.1 சதவீதமாக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு, 20 சதவீதத்திற்கு சற்று அதிகமாக இருந்தது.
2013ஆம் வருட விற்பனையில் உலகளவில் 31.3 சதவீத பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு 18.7 சதவீதமாக இருந்து, 15.3 சதவீதமாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications