உலகின் மிகவும் பழமையான வங்கிகள்!! வாங்களேன் ஒரு ரவுண்டு பாப்போம்..

சென்னை: இந்நாட்களில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் திவாலாகும் வங்கிகள் பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம். எனினும், சில வங்கிகள் உள்நாட்டுப் போர்கள், உலகப் போர்கள் மற்றும் பொருளாதர மந்த நிலைகள் ஆகியவற்றையும் தாண்டி தங்களுடைய அடையாளத்தை காப்பாற்றி வந்துள்ளன.

கடந்த 2008ஆம் உலக பொருளாதாரம் சந்தித்த மிகப்பெரிய நிதிநெருக்கடியில், அமெரிக்காவில் லேமென் பிரதர்ஸ் நிதியியல் நிறுவனம் திவாலானது. இக்காலக்கட்டத்தில் உலக நாடுகளில் பல வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்கள் மூடப்பட்டது. இத்தகைய பொருளாதார சரிவை தாக்குப்பிடித்து சில வங்கிகள் 200, 300 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய நிறுவனங்கள் உலகில் மிகவும் குறைவு தான். இது போன்ற பாரம்பரியமிக்க வங்கிகளின் பட்டியல் உங்களுக்காக!

மாண்டி டெய் பாஸ்சி டி சியன்னா

மாண்டி டெய் பாஸ்சி டி சியன்னா

1472-ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்டது மாண்டி டெய் பாஸ்சி டி சியன்னா வங்கி. இதுதான் உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் செயல்பாட்டில் இருந்து வரும் வங்கியாகும். மாண்டி டி பைய்டா அல்லது மாண்டே பியோ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஏழைகளுக்கு தானம் செய்வதற்காக கடன்களை வழங்கி வந்தது. 'குவியல்' என்று பொருள்படும் 'மாண்டே' என்ற வார்த்தை தானம் செய்வதற்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள பணத்தையே குறிக்கும். இந்த வங்கிகள் நகரத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு உதவி வந்தன.

பேரென்பெர்க் வங்கி

பேரென்பெர்க் வங்கி

ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் 1590-ம் ஆண்டு ஹான்ஸ் மற்றும் பால் பேரன்பெர்க் (Berenbreg) சகோதரர்களால் இந்த வங்கி தொடங்கப்பட்டது. இவர்கள் துணி வியாபாரம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களைச் செய்து வந்தனர். இந்த வங்கியின் தோற்றம் காரணமாக இந்த ஊர் புகழ் பெற்ற நிதி மற்றும் வணிக நகரமாக ஹம்பர்க் உருவானது. இந்த வங்கி அதனுடைய முதலீட்டு கொள்கைகள் மற்றும் பழமையான வியாபார வழிமுறைகளுக்காக மிகவும் அறியப்படுகிறது. தற்போது ஐரோப்பா முழுவதும் கிளைகளை கொண்டிருக்கும் இந்த வங்கி, ஜெர்மனியின் மிகவும் பழமையான தனியார் மற்றும் வியாபார வங்கியாக உள்ளது.

சி.ஹோயர் & கோ

சி.ஹோயர் & கோ

1672-ம் ஆண்டு இங்கிலாந்தில் சர்.ரிச்சர்ட் ஹோயரால் துவங்கப்பட்ட தி சி.ஹோயர் & கோ வங்கி அந்நாட்டின் மிகப் பழமையான தனியார் வங்கியாகும். இந்த வங்கியில் அடையாளத்தை அடிப்படையாக வைத்து தங்களுடைய இடத்தை வாடிக்கையாளர்கள் கண்டறியும் பழமையான நடைமுறை இருந்து வந்தது. சர்.ரிச்சர்ட் ஹோயர் கோல்டன் பாட்டில் என்ற அடையாளத்தை தேர்ந்தெடுத்திருந்தார். இது அன்றைய தங்க வேலைக்காரர்கள் பயன்படுத்தி வந்த செழிப்பு மற்றும் வளமைய குறிப்பதற்கான அடையாளமாகும்.

நியூயார்க் வங்கி

நியூயார்க் வங்கி

1784-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வங்கி அமெரிக்காவிலேயே மிகவும் பழமையான வங்கியாகும். ஆம் இது வால் ஸ்ட்ரீட்டில் இன்னமும் அடையாளம் குறையாமல் இருக்கும் பேங்க் ஆஃப் நியூயார்க் தான். இந்த வங்கி தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னர், 1792-ம் ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தை திறக்கப்பட்ட போது வெளிப்படையாக விற்பனைக்கு வந்த முதல் நிறுவனம் இது தான். அந்நாட்களில் மதிப்பிற்குரிய அட்டர்னியாக இருந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்பவர் தான் இந்த வங்கியின் உரிமையாளராக இருந்தார்.

ஸ்காட்லாந்து வங்கி

ஸ்காட்லாந்து வங்கி

1672-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் தொடங்கப்பட்ட வணிக வங்கி ஸ்காட்லாந்து வங்கியாகும். 17-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த வங்கி, அக்காலத்தில் வழக்கத்தில் இல்லாத வகையில், புதுமையான முறையில் தனக்கு சொந்தமாக கரன்சி நோட்டுகளை அச்சடித்திருந்தது. ஒரு காலத்தில் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்துடன் நடந்த போட்டியின் போது, திவாலாகும் நிலைக்கு சென்று விட்டாலும், ஸ்காட்லாந்து வங்கி இன்றும் நிலைத்து நிற்கிறது. 2001-ம் ஆண்டு ஹாலிபேக்ஸ் வங்கியுடன் இணைந்த பின்னர், HBOS என்று ஸ்காட்லாந்து வங்கி அழைக்கப்பட்டு வருகிறது.

பார்க்லேஸ் வங்கி

பார்க்லேஸ் வங்கி

1690-ம் ஆண்டு ஜான் ப்ரீம் மற்றும் தாமஸ் கோவுல்ட் ஆகிய தங்க வேலை செய்யும் வங்கியாளர்கள் லண்டனின் லோம்பார்ட் தெருவில் துவங்கிய பார்க்லேஸ் வங்கி, (Barclays) இங்கிலாந்தின் முதல் பன்னாட்டு வங்கியாகவும், நிதி நிறுவனமாகவும் உள்ள பெருமையை பெற்றுள்ளது. 1967-ம் ஆண்டு பார்க்லேஸ் வங்கியில் முதல் பண இயந்திரம் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2000-மாவது ஆண்டுகளில் இருந்து எண்ணற்ற நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு வந்துள்ளது இந்த வங்கி. சில்லறை வர்த்தகம், வளமான நிர்வாகம் மட்டுமல்லாமல் முழுமையான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வங்கி நிர்வாகம், அடமான கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் போன்ற பல்வேறு வகையான சேவைகளை பார்க்லேஸ் வங்கி வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், 48 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது பார்க்லேஸ் வங்கி.

இங்கிலாந்து வங்கி

இங்கிலாந்து வங்கி

இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கியாக இங்கிலாந்து வங்கி இருந்து வருகிறது. 1694-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வங்கி திரெட்நீடில் தெருவின் 'பழைய சீமாட்டி (Old Lady)' என்றும் சில காலம் அழைக்கப்பட்டு வந்தது. 19-ம் நூற்றாண்டில் கடன் பெறுவவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகவும், பல்வேறு நிதிச் சிக்கல்களின் போதும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் இடமாகவும் இந்த வங்கி இருந்தது. உதாரணமாக, முதல் உலகப் போரின் போது அரசாங்கம் கடன் பெற உதவியிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

சைல்ட் & கோ

சைல்ட் & கோ

1664-ம் ஆண்டு இலண்டனில் தொடங்கப்பட்ட சைல்ட் & கோ, இராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து வங்கியின் நிறுவனமாகும். 1664-ம் ஆண்டு இராபர்ட் ப்ளான்சார்டுடன் இணைந்திருந்த பிரான்சிஸ் சைல்டு என்பவரின் பெயராலேயே இந்த வங்கி சைல்டு & கொ என்று பெயர் பெற்றது. இராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து வங்கியின் பிராண்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட சைல்டு & கோ வங்கி நிதிச் சேவைகள் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் அதிகாரத்தை கொண்டுள்ளது. தற்போது இலண்டன் சைல்டு & கோ வங்கியின் கிளை இலண்டனின் 1, பிளீட் தெரு என்ற முகவரியில் உள்ளது. இந்த வங்கி ப்ரூடன்சியல் கட்டுப்பாட்டு அதிகாரப் பிரிவின் அங்கீகாரம் பெற்ற வங்கியாகும்.

சவ்ரிகெஸ் ரிக்ஸ்பேங்க் (Sveriges Riksbank)

சவ்ரிகெஸ் ரிக்ஸ்பேங்க் (Sveriges Riksbank)

ரிக்ஸ்பேங்க் என்று உண்மையில் அழைக்கப்பட்ட ஸ்வெரிகெஸ் ரிக்ஸ்பேங்க், உலகிலேயே மிகவும் பழமையான மத்திய வங்கியாகும். இந்த வங்கி 1668-ம் ஆண்டு ஸ்வீடனில் தொடங்கப்பட்டது. போருக்குப் பின்னர் வந்த முதல் பத்தாண்டுகளில் இந்த வங்கி கடன்களை கட்டுப்படுத்தி வந்தது மற்றும் ஸ்வீடனின் க்ரோனாவை 500 சதவிகிதம் பாதுகாத்து வந்ததிலும் முதன்மையான பங்கு வகித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+