மும்பை: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி வெள்ளிகிழமை ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்நிறுவனத்தின் விற்பனை சார்ந்த பல முக்கிய தகவல்களுடன் வெளியிட்டது. இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் காலத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை 10.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மேலும் உள்நாட்டு விற்பனை 6.3 சதவீதம் குறைந்துள்ளது, 2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சுமார் 96,569 கார்களை விற்ற மாருதி சுசூகி நிறுவனம் கடந்த வருடம் இதே காலத்தில் 1,03,026 கார்களை விற்றது குறிப்பிடதக்கது. இந்நிறுவனத்தின் பிரபலமான தயாரிபான மாருதி 800, ஆல்டோ, ஏ-ஸ்டார், வோகன் கார்களின் விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும் ஸ்ப்டு, எஸ்டிலோ, ரிட்ஸ் கார்களின் விற்பனை 1.9 சதவீதம் உயர்ந்து 24473 கார்கள் விற்பனையானது. இந்த காலாண்டிலும் காசஹி கார் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மாருதி சுசூகி தயரிப்புகளான ஜிப்ஸி, கிரண்டு விடாரா மற்றும் எர்டிகா கார்களிந் விற்பனை 21.9 சதவீதம் அதிரடியாக குறைந்தது கடந்த வருடம் 6095 கார்களை விற்பனை செய்த இந்நிறுவனம் இவ்வருடம் வெறும் 4,763 கார்களை மட்டுமே விற்றது.


Click it and Unblock the Notifications