2002ஆம் ஆண்டுக்கு முன் பாஸ்போர்ட் பெற்றவரா நீங்கள்?? முக்கிய அறிவிப்பு..

பெங்களுரூ: 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கையினால் எழுதப்பெற்ற பாஸ்போர்ட் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்ல இந்திய அரசுஅனுமதிக்காது. சிறிய நீல புத்தகமான நமது பாஸ்போர்ட் இப்போது உயர் தர அச்சுபடிவங்களால் அச்சடிக்கப்பட்டு வருகிறது, ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாஸ்போர்ட் கையினால் எழுதப்பட்டவையாகும். இயந்திரத்தால் வாசிக்க இயலாத (கையினால் எழுதப்பட்ட ) பாஸ்‌போர்ட்களை நடைமுறையிலிருந்து அகற்ற சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது. ICAOவில் இந்திய நாடும் ஒரு உறுப்பினர்.

கையினால் எழுத பெற்ற அல்லது 20 வருடம் செல்லுபடியாகும் தன்மை கொண்ட பாஸ்போர்ட் கொண்டுள்ள மக்களுக்கு ICAOவின் கீழ் செயல்படும் எந்த நாடும் விசா வழங்காது. நவம்பர் 24 2015 அன்று முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக 2001 ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட இந்த பாஸ்‌போர்ட்கள் அவை புதுப்பிக்கப்படும் வரை பயனற்றதாகவே இருக்கும்.

கர்நாடகா மண்டல பாஸ்‌போர்ட் அதிகாரி பி.எஸ்.கார்த்திகேயன் இது பற்றி கூறுகையில், இந்த வகையான பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் மக்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், இது குறித்து ஏற்கனவே விசாரிக்க துவங்கியதாகவும், மேலும் சிலர் தங்கள் பழைய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.

2002ஆம் ஆண்டுக்கு முன் பாஸ்போர்ட் பெற்றவரா நீங்கள்?? முக்கிய அறிவிப்பு..

2001 -ஆம் ஆண்டுக்கு முன் கையினால் எழுத பெற்ற பாஸ்போர்ட்களே விநியோகிக்கப்பட்டது. பின்பு இச்செயல்முறையை நிறுத்தப்பட்டது. மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கையினால் எழுத பெற்ற பாஸ்போர்ட்களைக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், கணினி சேவைகள் தொடங்கப்பட்ட போது ,2002 -ஆம் ஆண்டுக்கு முந்தைய தகவல்களும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் 20 வருட செல்லுபடியாகும் தன்மை கொண்ட பாஸ்போர்ட்களை நவம்பர் 25, 2015 தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

*பாஸ்போர்ட் ஆணையத்தின் இணையதளத்தில் புதிய விண்ணப்பத்தாரராக பதிவு செய்ய வேண்டும்.

* மின்னணு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

* பதிவு செய்த பின் ஒரு உள்நுழைவு ஐடி மற்றும் கதவு சொல் வழங்கப்படும்

*இரண்டாவது திரையின் பாஸ்போர்ட் வகையில் "பாஸ்‌போர்ட் மறுபதிவு" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

*தங்கள் தேவையை பொறுத்து, சாதாரண சேவை அல்லது தட்கள் சேவை முறையைதேர்வு செய்யலாம். இணைய தளத்தின் இயக்கங்களை பொறுத்து, அடுத்த சில விபரங்களை நிரப்ப வேண்டும்.

* முந்தைய பாஸ்போர்ட் குறித்த விபரங்களை சேர்க்க வேண்டும்.

*விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

* பாஸ் போர்ட் சேவா கேந்திரா விற்கான சந்திப்பு முன்பதிவினை ஆன்லைன் -ல் விண்ணப்பத்தை அச்சிட்டு நேர்காணலின் போது எடுத்து செல்ல வேண்டும்.

* வயது முகவரி ஆகியவற்றிற்கான அசல் மற்றும் ஙகள் அடையாள சான்றுகளை எடுத்து செல்ல வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+