மும்பை: மூன்றாம் கட்டமாக ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று துவங்கியது, இதில் இந்தியாவின் 8 முன்னணி நிறுவனங்கள் பங்குபெறுகின்றனர். இந்த ஏலத்தின் மூலம் அரசு சுமார் 11,300 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. மேலும் இன்று காலை 9 மணியளவில் ஏலம் துவங்கியது.
இந்த ஏலத்தில் 385 மெகா ஹெர்ட்ஸ் அலைகதிர்களை 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டிலும், 46 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகதிர்களை 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் ஏலமிட உள்ளது. இதில் பங்குபெறும் நிறவனங்களுக்கும் 240 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். மேலும் ஒரு நாளில் 6 முதல் 7 சுற்றுகள் ஏலம் நடத்தப்படும் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மணிநேரம் அழகாசமும் 20 நிமிட இடைவேளியும் உண்டு.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
இந்த மூன்றாம் கட்ட ஏலம், உயர் நிதிமன்ற ஆணையின் கீழ் நடைபெறுகிறது. உயர் நிதிமன்றம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த நிதிபதி சுமார் 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்தார் இதையடுத்து இதற்கான மறு ஏலத்தை நடத்த நீதிபதி உத்தரவு அளித்தார்.
3ஜி ஸ்பெக்ட்ரம்
3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் பல கட்டங்களாக நடைப்பெற்றது, இதில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பெற்றது இந்த ஏலத்தில் 9,407 கோடி பெறப்பட்டது. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற ஏலத்தின் மூலம் 3,600 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்த ஏலம் நாட்டில் 12 பகுதிகளுக்கு உட்பட்டது.
வோடஃபோன், லூப் மொபைல், ஏர்டெல்
இன்று நடைபெறும் ஏலத்தில் சில நிறுவனங்கள் இந்தியாவின் சில முக்கிய பகுதிகளில் தனது உரிமங்கள் காலாவதி ஆகும் நிலையில் உள்ளதால், அலைவரிசையை கைபற்றியே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் வோடஃபோன் டெல்லி, மும்பை, கொல்கத்தா பகுதிகளிலும், ஏர்டெல் டெல்லி மற்றம் மும்பை பகுதிகளிலும், லூப் மொபைல் மும்பையிலும் பெற வேண்டும்.
40 ஆயிரம் கோடி..
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முலம் 40,874.50 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. இதில் அனைத்து வதமான கட்டணங்களும் அடங்கும்.


Click it and Unblock the Notifications