சிண்டிகேட் வங்கி அடுத்த நிதியாண்டிற்குள் 5000 ஊழியர்களை சேர்க்க திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணிபால்: 2014-15 -ஆம் ஆண்டில் சிண்டிகேட் வங்கி தனது வங்கிக்கான புதிய ஊழியர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

 

கடந்த வெள்ளியன்று மணிபாலில் தனது வங்கியின் பொது மேலாளர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற போது தலைவரும் நிர்வாக இயக்குநருமான S.K.ஜெயின், பிஸினஸ் லைன்-உடனான அதிகாரபூர்வமற்ற பேச்சின் போது, வங்கி புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், எதிர் கொள்ளவிருக்கும் வருடத்தில் ஊழியர்கள் பலர் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

5000 பணியாளர்கள்

5000 பணியாளர்கள்

இதை கருத்தில் கொண்டே, 2500 எண்ணிக்கையிலான அதிகாரிகளையும், மற்றும் அதே எண்ணிக்கையிலான எழுத்தர் ஊழியர்களையும் (clerical staff) பணியில் அமர்த்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு தகுதி அதிகாரிகள்

சிறப்பு தகுதி அதிகாரிகள்

இந்த ஆட்சேர்ப்பில் ஏறத்தாழ 750 பேர் சிறப்பு தகுதி பெற்ற அதிகாரிகளாக இருப்பார்கள் என் அவர் தெரிவித்தார்.

3,500 கிளைகள்

3,500 கிளைகள்

நடப்பு நிதியாண்டில் 145 கிளைகளை திறந்துள்ள சிண்டிகேட் வங்கி இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 250 வங்கிகளை திறக்கும் என்று தெரிவித்தது. 2014-15-ஆம் ஆண்டில் மேலும் 200 கிளைகளை திறக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் என்றும், அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் 3,500 கிளைகளுடன் செயல்பட வேண்டும் என்பதே வங்கியின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

பயிற்சி வகுப்புகள்
 

பயிற்சி வகுப்புகள்

சிண்டிகேட் வங்கி தனது ஊழியர்களுக்கு கடன், மனிதவளம், அந்நியசெலாவணி ஆகிய துறைகளில் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கியுள்ளது. இந்த சிறப்பு பயிற்சியானது இரு வாரங்கள் வகுப்பறை பயிற்சியையும், இரு வாரங்கள் நேரடி பணி பயிற்சியையும் ( on-the-job training) உள்ளடக்கியதாக இருக்கும்.

ஃப்ரன்ட்லைன் ஊழியர்கள்

ஃப்ரன்ட்லைன் ஊழியர்கள்

மக்களுடன் நேரடி தொடர்பில் ஈடுபடும் ஃப்ரன்ட்லைன் ஊழியர்களுக்கு (frontline staff) பண்பாட்டு பழக்க முறைக்கான பயிற்சியயும் வழங்க வங்கி திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

On expansion mode, Syndicate Bank to recruit 5,000 next fiscal

Syndicate Bank plans to recruit around 5,000 new staff in 2014-15.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X