பெங்களுரூ: சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதி ஊக்கங்களின் மீதான குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக உலகெங்கிலும் வளரும் பொருளாதாரங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த நடவடிக்கைகளின் தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியப் பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலைமையில் இருப்பதாக வல்லுநர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை வாங்கும் அளவை 10 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைத்து 65 பில்லியன் டாலர் என்ற அளவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வைத்துள்ளது. இதன் மூலம் நிதி ஊக்க நடவடிக்கைகளில் ஒரு குறைப்பினை அந்நாடு மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய உலக பொருளாதார மந்த நிலையிலும் இந்திய பொருளாதார அடிப்படை கொள்கைகள் வலுவாக இருக்கின்றது. குறைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் அபரிமிதமான அன்னிய செலாவனி கையிருப்பு ஆகியவை இந்தியா வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுவதோடு பெருமளவிலான குறுகிய கால முதலீட்டு இழப்புகளை குறித்து கவலையடையத் தேவையில்லை என்பதையும் தெரிவிக்கின்றது.
அன்னிய முதலீடு
இந்தியா பிற வளர்ந்துவரும் பொருளாதாரங்களைப் போல தன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரி செய்ய அன்னிய முதலீடுகளை நம்பியிருப்பதால், வளர்ந்த நாடுகளிடமிருந்து அன்னிய முதலீடுகளை அந்நாட்டு முதலீட்டாளர்கள் குவித்ததால் நன்கு பயனடைந்தது.
முதலீகள் வெளியேற்றம்..
அமெரிக்க ஊக்க நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்று அவற்றை தங்கள் நாட்டினுள் முதலீடு செய்ய வாய்ப்பிருப்பதாக அச்சம் மேலோங்கியுள்ளது.
50 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை
இந்த நிதி ஊக்குவிப்பு குறைப்பினால் இந்தியவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகித அளவிற்கு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு அதன் மூலம் பிற வளர்ந்துவரும் பொருளாதாரங்களோடு ஒப்பிடுகையில் நிதிச்சீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவுகளை நன்கு எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அன்னிய செலாவனி கையிருப்பு
இந்திய அன்னிய செலாவனி கையிருப்பானது தற்போது 290 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பது வெளிப்புற நிதி நிலையானது வலுவுடன் இருப்பதை குறிக்கின்றது.
இந்தியாவின் வளர்ச்சி பாதை
இந்நிலையில் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க கொள்கை அமைப்பாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், அன்னிய முதலீட்டாளர்களின் இந்திய வளர்ச்சி மீதான நம்பிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் உள்ளன.
நாணய மாற்று விகிதம்
ரிசர்வ் வங்கியின் நாணய மாற்று விகித ஒழுங்கு நடவடிக்கைகள் இந்திய ரூபாய் மதிப்பை உயரச்செய்ததோடு இந்திய முதலீட்டாளர்களின் கவலைகளையும் அதிகமடையச் செய்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications