டெல்லி: சர்வதேச நிதிச்சேவைகள் நிறுவனமான ஆக்ஸிஸ் காபிடல் ஹோல்டிங்க்ஸ் தனது துணை நிறுவனமான ஆக்ஸிஸ் இன்ஷுரன்ஸ் மூலம் மருத்துவத் தொழில் பொறுப்புகளுக்கான பிரத்யேக காப்பீட்டுக் கிளை ஒன்றை நிறுவியுள்ளதாகவும் அதன் மூலம் தொழிற்சார் பொறுப்புகள் மற்றும் அது தொடர்பான அசம்பாவிதங்களுக்கான இழப்பீடுகளை மருத்துவக் குழுக்கள், மருத்துவமனைகள், மருத்துவத்துறையைச் சார்ந்த சேவைகள் மற்றும் தனி மருத்துவர்களுக்காக வழங்க முடிவு செய்துள்ளது.
ஆக்ஸிஸ் இன்ஷுரன்ஸின் புதிய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கிம்பர் லான்ட்ரி வட கலிபோர்னியாவில் இருந்த வண்ணம் இந்த புதிய கிளையினை வழி நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ஸிஸ் இன்ஷுரன்ஸ் நிறுவன அமெரிக்கப் பணிகள் பிரிவின் தலைவர் பீட்டர் வில்சன் கூறுகையில், "தனது தொழிற் திறமை, துறை ரீதியான முன் அனுபவம் மற்றும் வலுவான மூலதனம் ஆகியவற்றின் மூலம் மருத்துவத் துறையை ஒரு கவரச்சிமிக்க மற்றும் பலனளிக்கக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பாக ஆக்ஸிஸ் இன்ஷுரன்ஸ் கருதுகிறது. நாங்கள் இந்தத் துறையில் மூத்தவரும் 37 வருடங்கள் தொழிற்சார் பொறுப்புகளிலும் மற்றும் 20 வருடங்கள் மருத்துவக் காப்பீடுகளிலும் முன் அனுபவம் வாய்ந்தவரான கிம்பர் லான்ட்ரி எங்களின் இப்புதிய முயற்ச்சியினை முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
உலகத் தரம் வாய்ந்த மருத்துவத் தொழில் பொறுப்புகளுக்கான காப்பீட்டுச் சேவைகளை இந்த பிரத்யேகக் கிளையின் மூலம் தயாரித்து வழங்க கிம்பர் மற்றும் அவரின் அணியினரின் பங்களிப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்கிறோம். இந்த சிறப்புப் பிரிவின்பால் அளித்த உறுதியின்படி, வர்த்தகம் மேலும் வளரும்போது ஒரு உருவாக்க அணியையும் சேர்க்க எண்ணியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
ஹட்சன் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக 1997 முதல் இருந்துவந்த லான்ட்ரி பிறகு ஆக்ஸிஸ் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன்பாக ஃபைர்மேன்'ஸ் ஃப்ண்ட் அமைப்பில் அதே போன்ற ஒரு பதவியை வகித்தார். அவர் இதற்குமுன் டாக்டர்ஸ் கம்பெனி, நார்கால் மியுசுவல், மார்ஷ் அண்ட் மெக்லென்னன் மற்றும் அட்வென்டிஸ்ட் ஹெல்த் ஸிஸ்டம் நிறுவனத்தின் நேரடி காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றில் பதவி வகித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications