டாப் சிஇஓக்களின் அசரவைக்கும் சம்பளம்!!

சென்னை: மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைப்பது எதற்காக மாத கடைசியில் கிடைக்கும் சம்பளத்திற்காக தான். இந்த வகையில் இந்திய பணியாளர்களின் சம்பளம் கடந்த 10 வருடங்களில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய நாளில் சம்பளம் அதிகம் கிடைக்கும் பணி என்றால் அனைவரும் கண்களை முடிக்கொண்டு சொல்வது சாப்ட்வேர் துறை. ஆனால் அதில் உள்ள தலைவலி அதில் வேலை செய்பவர்களுக்கு தான் தெரியும்.

சரி இந்த ஐடி துறையில் நிறுவனருக்கு அடுத்து உள்ள உயர் பதவி எது என்று பார்த்தோமானால் சிஇஓ பதவி தான். ஐடி துறையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு கூட 10,000 20,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் நிலை இந்த சிஇஓ பதவியில் இருக்கும் நபர்களுக்கும் எவ்வளவு சம்பளம் இருக்கும்?? வாங்க அதையும் பார்த்து தெரிந்து கொள்வோம்..

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்.சந்திரசேகரின் சம்பளம் ஆண்டுக்கு 11.6 கோடி ரூபாய், இது தவிற போனஸ், செயல்திறன் போனஸ், என பல உண்டு..

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ வினித் நாயர் அவர்களின் சம்பளம் 8.42 கோடியாகும்.

ஐகேட்

ஐகேட்

சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஐகேட் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு மாறி அசோக் வெமுரியின் ஆண்டும் வருமானம் 8.17 கோடி.

மெப்சிஸ்

மெப்சிஸ்

ஹெச்பி நிறுவனத்தின் கிளை நிறுவனமான மெப்சிஸ் நிறுவனத்தின் சிஇஓ பாலு கனேஷ் ஐயர் அவர்களின் சம்பளம் 7.45 கோடி.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்னும் ஒரு வருடத்தில் ஒய்வு பெற உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ திரு ஷிபுலால் அவர்களின் சம்பளம் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் சம்பளத்தை பற்றி அறிய கடைசி ஸ்லைடருக்கு வரவும்.

விப்ரோ

விப்ரோ

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோவின் சிஇஓ டி.கே.குரியேன் அவர்களின் சம்பளம் 6.13 கோடியாகும்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக நேற்று பதவியேற்ற சத்ய நதெல்லா-வின் சம்பளம் 7.5 கோடி (1.2 மில்லியன் டாலர்). இவர் இந்தியர் என்பதில் நம் அனைவருக்கும் பெருமை தான். ஆனால் இந்த பதவிக்கு கடும் போட்டியாக இருந்தவரும் இந்தியர் தான் அதிலும் நம் தமிழர் என்பதில் நாம் கர்வம் அடைய வேண்டும். அவர் பெயர் திரு. சுந்தர் பிச்சை, இவர் தமிழகத்தின் தலைநகரான சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை திண்பதை விடுத்து இப்போது அனைவரும் பாக்கெடில் வைத்து கொண்டு சுற்றுகிறோம். நான் சொல்வது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட்களை. உலகத்தில் அனைவருக்கும் வரும்பதக்க நிறுவனமாக திகழ்வது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், இவரது சம்பளம் 4 மில்லியன் டாலர் அதாவது 26 கோடி.

ஷிபுலால்

ஷிபுலால்

சரி இன்போசிஸ் ஷிபுலால் அவர்களில் சம்பளம் ஆண்டுக்கு 1ரூ மட்டும் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+