இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! வங்கி செயல்பாடுகள் கடுமையாக பாதிப்பு..
டெல்லி: கடந்த வாரம் வங்கி ஊழியர்களுக்கும் தலைமை தொழிலாளர் நல ஆணையருடன் நடந்த ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடந்தது நாம் அனைவருக்கும் அறிந்ததே. இந்த பேச்சு வார்த்தை வங்கி ஊழியர்களுக்கு சாதகமாக அமையாத காரணத்தினால் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி இன்று மற்றும் நாளை வங்கி செயல்படாது இதனால் வங்கி பரிவர்த்தனை, வங்கி செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று தலைமை தொழிலாளர் நல ஆணையருடன் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை என்று வங்கி ஊழியர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊதிய உயர்வு கோரிக்கையை கடுமையாக வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி அமைப்பின் தலைவர் கூறினார். மேலும் அவர் இந்த வேலை நிறுத்த போரட்டத்தில் 27 பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
Share This Article
English summary
Bank employees on strike in february
bank employees on strike in february
Story first published: Monday, February 10, 2014, 10:57 [IST]