இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தில் ரூ.714 கோடி முதலீடு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அன்னிய அமைப்புசார் முதலீட்டாளர்கள் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 714.30 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். நிகர கொள்முதலானது இதே வேளையில் 64,478 கோடி ரூபாய் என்ற அளவிலும் நிகர விற்பனை 63,764.40 கோடியாகவும் இருந்தது.

 

செப்டம்பர் மாதம் முதல் அன்னிய நிதி அமைப்புகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இந்திய முதலீட்டு (நிகர) பங்குக் கொள்முதலைச் செய்துள்ளன.

உண்மையில், அன்னிய முதலீட்டு அமைப்புகள் பகுதிவாரியாக இந்தியப் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டில் அவை ஒட்டுமொத்த நிகர கொள்முதலாக 1,12,968.70 கோடி ரூபாயை இந்தியப் பங்குகளை வாங்கி இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளன. இது 2012 ஆம் ஆண்டில் 1,28,360.70 கோடியாக இருந்தது.

இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தில் ரூ.714 கோடி முதலீடு!!

இந்தியா கடந்த சில வருடங்களாக அமெரிக்க நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் விளைவாக பெரும் முதலீட்டு வரவினைக் கண்டது. இந்த நடவடிக்கைகள் உலக நிதி அமைப்பில் நிறைந்த பணப்புழக்கத்தை ஊக்குவித்ததோடு அதன் மூலம் அதிகளவில் முதலீடுகள் இந்தியாவை அடைய வழிவகுத்தது. இந்தியா அதிக அளவில் அன்னிய அமைப்புகளின் முதலீடுகளைப் பெற்றதற்கு இது ஒன்றே காரணமாகும்.

எனினும் அமெரிக்கா தன் நிதி ஊக்குவிப்புத் திட்டங்களைத் திரும்பப் பெறவுள்ளதால் இந்த நிலைமை மாறலாம் என கருதப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FII net investments for Jan 2014 at Rs 714 crores

Foreign institutional investors (FII) have made net purchases of Rs 714.30 crores for Jan 2014. While net purchases stood at Rs 64,478.90 crores, net sales were Rs 63,764.40 crores.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X