டெல்லி: இண்டர்நெட் மற்றும் மொபைலின் ஆதிக்கம் உலகின் எந்தொரு பகுதியையும் விட்டு வைக்கவில்லை நடுக்காட்டில் இன்டர்நெட், பாலைவனத்தில் மொபைல் நெட்வொர்க் என தொழில்நுட்பம் பல பரிமானங்களில் வளர்ந்துள்ளது. ஆனால் வங்கி துறையில் மட்டும் மொபைல் சேவையின் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு செய்தி.
சுமார் 90 கோடி மொபைல் ஃபோன் இணைப்புகள் மற்றும் 45 கோடி வங்கிக் கணக்குகள் ஆகியவற்றில் வெறும் 6.7 கோடி ஃபோன்கள் மட்டுமே வங்கிக்கணக்குகளோடு தொடர்புடையவாக இருப்பதாகவும் இது மொபைல் வங்கிச்சேவைத் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய செலுத்துகை நிறுவனம் (நேஷனல் பேமென்ட்ஸ் கார்போரேஷன்) தெரிவித்துள்ளது.
மொபைல் வாடிக்கையாளர்
நாட்டில் உள்ள மொத்த மொபைல் இணைப்புகள் 90 கோடியாகும் அதில் செயல்பட்டில் உள்ள மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 கோடியிலிருந்து 60 கோடியாக உள்ளது. இதில் 90 சதவிகிதம் அல்லது 40 கோடி உபயோகிப்பாளர்கள் மட்டுமே வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர்.
வங்கிக் கணக்கு
இந்தியாவில் 6.7 கோடி மொபைல் எண்கள் மட்டுமே அவற்றின் வங்கிக் கணக்குகளோடு இணைக்கப்பட்டுள்ளன என தேசிய செலுத்துகை நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி அபே ஹோதா வார இறுதியில் நடைபெற்ற நிதிச் சேர்க்கை மற்றும் செலுத்துகை முறைமைகள் தொடர்பான மாநாட்டில் தெரிவித்தார்.
எஸ்எம்எஸ் அறிக்கை
ஆர்பிஐ-யும் ஒவ்வொரு வங்கிப்பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ் அனுப்பவேண்டியது அவசியம் என்று கூறியிருந்தாலும் இது ஒவ்வொரு வாடிக்கையாளரும் நன்கு சேவையை பெற்றால் மட்டுமே சாத்தியம் என ஹோதா தெரிவித்தார்.
வங்கிச் சேவை மென்பொருள்
அவர் மேலும் மொபைல் வங்கி மென்பொருள்களைப் பதிவிரக்கம் செய்வதன் அவசியம் குறித்துப் பேசியனார் யுஎஸ்எஸ்டி எனப்படும் "*99# என்ற குறியீடு மிகவும் முக்கியமானதாகும் கணக்கு இருப்புத் தகவல்கள் மற்றும் செலுத்துகை ஆகியவற்றில் மொபைல் ஃபோன்களை கொண்டு செய்ய ஏற்றவகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்,
தாய் மொழியில் வங்கி சேவை
மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளூர் மொழிகளில் சேவை வழங்கும் வரை மொபைல் வங்கி சேவை நன்கு துவங்க இயலாது என்று கூறிய அவர் "உள்ளூர் மொழிகளில் சேவை வழங்கும் வரையில் பணப்பரிமாற்றங்களின் சேர்ப்பு சாத்தியமாகாது" என்றார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications