வரலாற்று சாதனை நிகழ்த்திய ஐஐஎம்-லக்னோ!! 100% வேலைவாய்ப்பு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லக்னோ: பொருளாதார மந்தநிலை வருடாந்தர வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று நிலவி வந்த அச்சத்தையும் மீறி, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - லக்னோ (ஐஐஎம்-எல்), இவ்வருடம் வெளியேறவிருக்கும் 436 மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தந்து, கடந்த வெள்ளிக்கிழமையோடு 100% ப்ளேஸ்மென்ட் என்ற பெருமையை எட்டியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் சுமார் 207 நிறுவனங்கள் கலந்து கொண்டது.

 

"சுமார் 436 மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு, 49 புதிய நிறுவன தேர்வாளர்கள் உள்ளிட்ட 207 நிறுவன தேர்வாளர்கள் என த்தமாக சுமார் 440 வேலைவாய்ப்பை வழங்கப்பட்டுள்ளது.", என்று இந்த முதன்மையான வர்த்தக கல்வி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

440 வேலைவாய்ப்பு

440 வேலைவாய்ப்பு

இந்த வேலைவாய்ப்புகளில் சுமார் 92 ப்ரீ-ப்ளேஸ்மென்ட் ஆஃபர்களும், சுமார் 132 லேட்டரல் ஆஃப்ர்களும் உள்ளடக்கியுள்ளதாகத் தெரிகிறது. ப்ரீ-ப்ளேஸ்மென்ட் ஆஃபர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 28% அதிகமாகும். இது இக்கல்லூரியின் வரலாற்று சாதனை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

நாட்டிற்கு தலைவர்கள் தேவை, உழைப்பாளிகள் இல்லை..

நாட்டிற்கு தலைவர்கள் தேவை, உழைப்பாளிகள் இல்லை..

ஐஐஎம்-லக்னோ மாணவர்களுள் ஒருவர் கூட ப்ளேஸ்மென்ட் ப்ராசஸை புறக்கணித்து விட்டு, தம் சொந்த முயற்சியில் வேலை தேடவோ அல்லது தொழிலை தொடங்கவோ முனையவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

துறை சார்ந்த வேலைவாய்ப்பு..
 

துறை சார்ந்த வேலைவாய்ப்பு..

விற்பனை, மார்க்கெட்டிங், கன்ஸல்டிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் தான் ஐஐஎம் - லக்னோவின் முன்னணி நிறுவன தேர்வாளர்களாக இருந்துள்ளன. 24% சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளிலும், 21% கன்ஸல்டிங் நிறுவனங்களாலும், 18% ஃபைனான்ஸ் நிறுவனங்களாலும், மீதமுள்ள சதவீதம் இதர நிறுவனங்களாலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஃப்ளிப்கார்ட், அமேசான்

ஃப்ளிப்கார்ட், அமேசான்

ஆன்லைன் விற்பனை ஜம்பவான் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவையும் முன்னணி நிறுவன தேர்வாளர்களில் ஒன்றாக இருந்தது. இவை தவிர கன்ஸல்டிங் நிறுவனங்களான டிலாய்டெ, மெக்கென்சி மற்றும் பாஸ்டன் கன்ஸல்டிங் குழுமம், ஐடி நிறுவனங்களான ஐபிஎம் இந்தியா, அக்சென்சூர் மற்றும் காக்னிசென்டு, ஐசிஐசிஐ பாங்க் லிமிட்டெட் மற்றும் ஆக்ஸிஸ் பாங்க் லிமிட்டெட், ஃபார்மாசூட்டிகல் நிறுவனங்களான ஸிப்லா லிமிட்டெட் மற்றும் கிளக்சோ ஸ்மித் கிளைன் ஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிட்டெட் ஆகியவையும் அதிக அளவில் ரெக்ரூட் செய்துள்ளன.

நுகர்வோர் நிறுவனங்கள்

நுகர்வோர் நிறுவனங்கள்

நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுள் ப்ரோக்டர் அண்ட் காம்பிள், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் க்ராஃப்ட்-காட்பரி ஆகியவை முன்னணி ரெக்ரூடர்களாக இருந்துள்ளன.

49 நிறுவனங்கள்

49 நிறுவனங்கள்

"முதன்முறையாக நாற்பத்தொன்பது நிறுவனங்கள் ஐஐஎம்-லக்னோவில் இருந்து வேலைக்கு ஆள் எடுத்துள்ளன. இவற்றுள் 60% ஐடி/இ-காமர்ஸ்/தொழில்நுட்பம் மற்றும் பிஎஃப்எஸ்ஐ (வங்கி, ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் மற்றும் இன்சூரன்ஸ்) துறைகளில் இருந்து வந்துள்ளன," என்று ஐஐஎம்-எல்லில் ப்ளேஸ்மென்ட் சேர்மனாக பதவி வகிக்கும் புஷ்பேந்திரா ப்ரியதர்ஷி கூறியுள்ளார்.

மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஐடி

மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஐடி

"கன்சல்டிங், ஹெல்த்கேர், கல்வி, மீடியா, ஆட்டோமோட்டிவ், டெக்ஸ்டைல் மற்றும் எனர்ஜி ஆகியவை மேற்கூறிய நிறுவனங்கள் சார்ந்துள்ள இதர சில துறைகளாகும். பெரும்பாலான பணிகள் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ் மற்றும் சிஸ்டம்ஸ்/ஐடி ஆகிய துறைகளில் தாம் வழங்கப்பட்டுள்ளன." என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIM-Lucknow achieves 100% placement

The Indian Institute of Management, Lucknow (IIM-L) on Friday completed securing jobs for all the 436 students in its outgoing batch in 207 companies, despite fears that the economic slowdown might affect the annual placements.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X