மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக அண்ட்ராய்டு போன் தயாரிக்கும் நோக்கியா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில்: நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் இணைந்தது நாம் அனைவருக்கும் தெரியும். சந்தை மதிப்பை காப்பற்ற நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் சில பல ஒப்பந்தங்களுடன் புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் சென்னையில் இருக்கு நோக்கியா தொழிற்சாலை அரசு கைபற்றும் நிலையில் இருந்தபோது மைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் தான் இந்நிறுவனத்தை கைப்பற்றியது.

 

இந்நிலையில் நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி குறைந்த-விலை ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது என வால் ஸ்ட்ரீட் நாளிதழின் தகவலறிக்கை கூறுகிறது.

நோக்கியா - மைக்ரோசாப்ட்

நோக்கியா - மைக்ரோசாப்ட்

பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோக்கியா நிறுவனம் இதன் ஹேண்ட்ஸெட் பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த புதிய ஃபோனை, இம்மாதத்தின் இறுதியில் பார்ஸிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் உலக மாநாட்டில் காண்பிக்கவுள்ளதாக, இவ்விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்த, தம் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத சிலர் தெரிவித்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

மறுப்பு..

மறுப்பு..

நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடதக்கது.

அண்ட்ராய்டு போன்

அண்ட்ராய்டு போன்

இந்த புதிய அண்ட்ராய்டு போன் வளர்ந்து வரும் சந்தைகளை இலக்காகக் கொண்டு, கூகுளின் ஹையர்-எண்ட், கஸ்டம் அண்ட்ராய்டு அம்சங்களில் சில சேவைகள் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்சங், ஆப்பிள்
 

சாம்சங், ஆப்பிள்

மைக்ரோசாப்ட் மற்றும் அதன் முக்கிய ஹேண்ட்ஸெட் பார்ட்னராகிய நோக்கியா ஆகிய இரண்டும், சாம்சங்கின் அண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் போன்றவைக்கு மத்தியில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் தடம் பதிக்க போராடி வருகின்றன.

விண்டோஸின் பங்கு குறைவே..

விண்டோஸின் பங்கு குறைவே..

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான ஸ்ட்ராடெஜீ அனாலிட்டிக்ஸி நிறுவனத்தின் ஆயிவின் படி, கடந்த வருடம் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில், சுமார் 79 சதவீதம் ஆன்ட்ராய்டையே உபயோகித்ததாகவும், 15 சதவீதம் ஐஓஎஸ் உடனான ஆப்பிளின் ஐஃபோன்கள் எனவும், சுமார் 4 சதவீதம் மட்டுமே விண்டோஸ் ஃபோன் சாஃப்ட்வேரை உபயோகித்ததாகவும் அறியப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nokia to unveil low-cost Android phone, report says

Nokia will unveil a low-cost smartphone running a version of Google Inc's Android operating system, despite the company's close partnership with Microsoft Corp.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X