சென்னை: கேரளாவை தலைமியிடமாக கொண்ட செயல்படும் தனியார் வங்கியான தனலக்ஷ்மி வங்கி தனது 3ஆம் காலண்டு முடிவுகளை இந்த வாரம் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் 3ஆம் காலாண்டு முடிவுகளை பார்க்கும் போது, வங்கியின் வராக் கடன்கள் மற்றும் பயன் தரா சொத்துகளின் காரணமாக சுமார் 119.37 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தனியார் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கடந்த நிதியாண்டு 2012-13-இன் அதே காலாண்டில் 117.64 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்ததாக இந்நிறுவனம் தெரிவித்தது.
வருவாய் 8% சரிவு
2012-13 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தனலக்ஷ்மி வங்கியின் வருவாய் ரூபாய் 352.11 கோடியிலிருந்து 327.52 கோடியாகக் குறைந்ததாக அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த பதிவுகளில் தெரிவித்திருந்தது.
வராக்கடன் ஒதுக்கீடு
அந்த வங்கி மூன்றாவது காலாண்டில் வராக்கடன் ஒதுக்கீடாக முன்பிருந்த 9.71 கோடிக்கு மிக அதிமாக 117.76 கோடியை வைத்திருந்தது.
வராக்கடன் உயர்வு
வராக்கடன் மற்றும் பயன் தரா சொத்துகளின் மொத்த மதிப்பு 3ஆம் காலாண்டில் 312.84 கோடி ரூபாயிலிருந்து 546.32 கோடி ரூபாயாக உயர்ந்தது.
நிகர பயன் தரா சொத்து
நிகர பயன் தரா சொத்து மதிப்பு 2.93 சதவிகிதம் அல்லது 216.02 கோடி ரூபாயிலிருந்து 4.64 சதவிகிதம் அதாவது 350.22 கோடி ரூபாயாக அதிகரித்த்து.
பங்குச் சந்தை
மும்பை பங்குச்சந்தையில் தனலக்ஷ்மி பாங்க் பங்குகள் விலை ரூபாய் 31.95 என்ற அளவில் 0.15 சதவிகித சரிவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications