டெல்லி: இந்திய காப்பீட்டுத் துறைகளில் காப்பீடு, ஆயுள் காப்பீட்டுத் தரகு, மூன்றாம் நபர் நிர்வாகம் மற்றும் அளவீட்டாளர்கள் தொடர்பான செயல்பாடுகளில் அன்னிய நேரடி முதலீடு, அன்னிய அமைப்புசார் முதலீடு மற்றும் வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு 26 சதவிகிதம் வரை முதலீடு செய்ய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியது.
புதன்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட வரைமுறைகளின் படி, அன்னிய நேரடி முதலீடு (FDI), அன்னிய அமைப்புசார் முதலீடு (FII) மற்றும் வெளிநாட்டு இந்தியர்களின் முதலீடு (NRI) ஆகியவற்றை உள்ளடக்கிய முதலீடுகள் 26 சதவிகிதம் வரை நேரடி வழிமுறை மூலம் அனுமதிக்கப்படுவதாகவும், இது காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டுத் தரகர்கள், மூன்றாம் நபர் நிர்வாக அமைப்புகள், அளவீட்டாளர்கள் மற்றும் சேத மதிப்பீட்டாளர்கள் ஆகியவர்களுக்குப் பொருந்தும் எனவும் தெரிகிறது.
அன்னிய நேரடி முதலீடு
இதற்குமுன் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது மத்திய அரசி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்
முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் துவங்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (IRDA) உரிமம் பெறவேண்டும் எனவும் இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பு தெரிவித்துள்ளது.
தரகு அமைப்புகள்
காப்பீட்டுத் தரகு அமைப்புகள், காப்பீட்டு அல்லது மறுக்காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்கள் வாடிக்கையாளர்களுகாக ஒப்பந்தங்கள் ஏற்பாடு செய்வதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றன.
மூன்றாம் நபர் நிர்வாக அமைப்புகள்
மூன்றாம் நபர் நிர்வாக அமைப்புகள், மருத்துவக் காப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்களின் சார்பாக ஏற்பாடு செய்து தருவதை தொழிலாகக் கொண்டுள்ளன.
சேத மதிப்பீட்டாளர்கள்
அளவீட்டாளர்கள் மற்றும் சேத மதிப்பீட்டாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நுட்பமான சேவைகளை வழங்குகின்றனர். இவர்களனைவரும் ஐஆர்டிஏ-விடம் இந்த செயல்பாடுகளுகாக உரிமம் பெறவேண்டும்.
காப்பீட்டு தொழில் துறை
அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்த கோரிக்கை விடுத்துவரும் காப்பீட்டு தொழில் துறை, விதிமுறை தளர்வுகளில் உள்ள கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள மசோதா
அன்னிய முதலீடுகளை உயர்த்த வலியுறுத்தும் காப்பீட்டு விதிகள் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பதோடு அரசியல் கட்சிகளின் ஆதரவின்மையால் நடப்பு பாராளுமன்ற நிகழ்வுகளிலும் நிறைவேற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


Click it and Unblock the Notifications