டெல்லி: பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ப.சிதம்பரம் சூப்பர் ரிச் வரி விகிதத்திற்கு ஒரு முடிவை கொண்டு வந்தார். வருடத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கான சர்சார்ஜ் எவ்வித மாற்றுமுமின்றி 10 சதவீதத்திலேயே தக்க வைத்துக் கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.
சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட, ஆனால் 10 கோடி ரூபாய்க்கு குறைவான மொத்த ஆண்டு வருமானத்தை உடைய உள்நாட்டு நிறுவனங்கள் மீதான 5 சதவீத சர்சார்ஜையும் அப்படியே தொடரலாம் என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால் 10 கோடி ரூபாய்க்கு மேலான வருமானத்தை உடையோர் சுமார் 10 சதவீத சர்சார்ஜை செலுத்த வேண்டியிருக்கும்.
10% சர்சார்ஜ்
2014ஆம் ஆண்டின் நிதி மசோதாவின் படி, பெரும் பணக்காரர்களின் மீதான 10% சர்சார்ஜ் மேலும் ஒரு வருடத்திற்கு, அதாவது 2015 மார்ச் வரையில் தொடரும் என்று தெரிகிறது. ஒரே வகையான வரி அந்தஸ்துடன் கூடிய தனிநபர்கள், பகுக்கப்படாத இந்து குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றிற்கு இந்த சர்சார்ஜ் பொருந்தும்.
காலம் நீட்டிப்பு
2013-14 பட்ஜெட்டின் போது விதிக்கப்பட்ட இந்த சர்சார்ஜ், 2014 மார்ச் 31 ஆம் தேதியோடு காலாவதியாகி விடும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதன் காலம் நீட்டிக்கப்பட்டது.
42,800 பேர் மட்டும் தானா??
சுமார் 42,800 பேர் மட்டுமே தங்களின் வருடாந்தர வருமானம் 1 கோடிக்கு மேல் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிதம்பரம்.
கூடுதல் வருவாய்
பெரும் பணக்காரர்கள் இவ்வரி விதிப்பு தொடரும் என்றே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அரசாங்கம் கூடுதல் வருவாய் பெறும் பொருட்டு இதனை அடுத்த நிதியாண்டிலும் தொடர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்று வரிவிதிப்பிற்கான கேபிஎம்ஜி இயக்குனர் வினீத் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள்
அயல்நாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, மொத்த ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய்க்கும் 2 கோடி ரூபாய்க்கும் இடைப்பட்டு இருக்கக்கூடிய பட்சத்தில் சர்சார்ஜ் 2 சதவீதம் என்ற அளவிலும், ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் 5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும்.
சிதம்பரத்தின் பைனல் டச்..
"எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் வருமானத்தை பெருக்க வேண்டியதும் அவசியம்" என்று 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று ஆற்றிய பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications