அசாம் மாநிலத்தின் வணிக வரி வசூல் 12% உயர்வு!! தருன் கோகோய் பெருமிதம்..

அம்மாநில 2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில் அவர் "தோராயமாக டிசம்பர் 2013 வரை, வசூலான வரி பணம் ரூபாய் 5428.29 கோடியாக கடந்த ஆண்டின் ரூ.4854.79 கோடியை ஒப்பிடுகையில், 12 சதவிகத வளர்ச்சியையும் அடைந்துள்ளது" என்றார்.
"மார்ச் 2014-க்குள் இதன் வளர்ச்சி 15 சதவிகிதத்தை தாண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தின் நிதியமைச்சராகவும் விளங்கும் தருன் கோகோய், ரூபாய் 7,050.56 கோடி அளவிற்கு 2012-13 ஆம் ஆண்டில் வணிகவரி வருவாய் இருந்ததாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டான 2011-12 ஆம் ஆண்டில் 6,604.31 கோடியாக இருந்ததோடு 7 சதவிகித வளர்ச்சியையும் கொண்டிருந்த்து என மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications