பாதுகாப்புத் துறையில் 49% அன்னிய முதலீடு அனுமதி!! மகிழ்ச்சியில் அமெரிக்க நிறுவனங்கள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு விகிதம் தற்போதுள்ள 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது, இதனால் இந்தியாவில் அமெரிக்க நிறுவன முதலீடுகள் உயர வாய்ப்புள்ளதாக போயிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்திகளுக்குத் தெரிவித்தார்.

 

போயிங் நிறுவனத்தின் பாதுகாப்பு, எதிர்ப்பு மற்றும் விண்வெளி தொடர்பான வர்த்தகப் பிரிவின் துணைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப் கொஹ்லர் இது குறித்து குறிப்பிடுகையில் "49 சதவிகித அன்னிய முதலீட்டு அனுமதி அதிகப்படியான அமெரிக்க நிறுவன முதலீடுகளைக் ஈர்க்கும் வாய்ப்பாக உள்ளது" என்றார்.

ஜெஃப் கொஹ்லர்

ஜெஃப் கொஹ்லர்

"26 சதவிகித வரையறைக்குள் முதலீடு செய்ய வேண்டியிருப்பதை எங்கள் வர்த்தகத் தலைமைக் குழுவிற்கு எடுத்துரைப்பது கடினமாயிருந்தது" என்று தெரிவித்த அவர், இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் முதலீட்டு முக்கியத்துவத்தைக் குறித்து விமான வர்த்தகதில் தன் சக பணியாற்றுவோருடன் அடிக்கடி உரையாடுவதுண்டு என்றும் தெரிவித்தார்.

49%.. மிக்க மகிழ்ச்சி

49%.. மிக்க மகிழ்ச்சி

"49 சதவிகிதம் அல்லது 40 சதவிகிதத்திற்கும் அதிகமான அனுமதி அதனை ஈர்ப்புடையதாக்குகிறது" என்று அவர் சிங்கப்பூர் விமான கண்காட்சியின்போது இந்தியச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதலீடு செய்ய சரியான நேரம்

முதலீடு செய்ய சரியான நேரம்

"உண்மையில் இது 49 சதவிகித அளவிற்கு உயர்த்தப்பட்டால், என்னைப் போன்றோர் எங்களுடைய வர்த்தகத் தலைமயை அணுகி தற்போது முதலீடு செய்ய நமக்கொரு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்க முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

 வருவாய்
 

வருவாய்

இந்த 49 சதவீத அனுமதியை கொண்டு நாங்கள் எங்கள் இயக்குனரவை மற்றும் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டின் மீதான அதிகப்படியான வருவாயினை காட்ட இயலும் என்று கோஹ்லர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India will see more investment from US cos if FDI level in defence is raised to 49%: Boeing

India will see more investments from American companies if New Delhi raises the Foreign Direct Investment (FDI) level to 49 per cent in the defence sector from the present 26 per cent, a top executive of Boeing said reported PTI.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X