மும்பை: இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையின் பழம்பெரும் தொலைதொடர்பு நிறுவனமான லூப் மொபைல் நிறுவனம் கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது, இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தை விற்ற நிறுவனத்தின் உயர் மட்ட குழு முடிவு செய்தது. இந்நிறுவனத்தை கையகப்படுத்த பல நிறுவனங்கள் முற்பட்டது, அதில் வோடப்போன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் லூப் மொபைல் நிறுவனத்தை பாரதி ஏர்டெல் கையகப்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. சந்தாதாரர்களைப் பொறுத்த வரை நாட்டின் மிகப்பெரும் ஆப்ரேட்டராக இந்நியாவின் முக்கிய நகரில் இயங்கிவரும் இதன் இருப்பை, இந்த கையகப்படுத்தும் முயற்சி மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றிய நிதி தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
30 லட்சம் + 40 லட்சம்
இந்த ஒப்பந்தத்தின் படி, மும்பையில் செயல்பட்டு வரும் லூப் மொபைலின் 30 லட்ச சந்தாதாரர்கள், ஏர்டெல்லின் 40 லட்சம் அதிகமான எண்ணிக்கையிலான சந்தாதாரர்களுடன் இணையவிருக்கிறார்கள்.
ஒப்பந்தம்
திட்டவட்டமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ஒழுங்குமுறை மற்றும் சட்டப்பூர்வமான அங்கீகாரங்களைப் பெற்றவுடன், இவ்விணைப்பு இடைவெளியற்ற ஒருங்கிணைப்புக்கு உள்ளாக்கப்படும் என்று பாரதி ஏர்டெல் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
700 கோடி ரூபாய்
இந்த ஒப்பந்தம் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்புடையது என்று மீடியா தகவல்கள் கூறுகின்றன.
2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்கு
இப்பரிந்துரைக்கப்பட்ட ட்ரான்ஸாக்ஷன் சுமார் 2,500 -க்கும் மேற்பட்ட செல் ஸைட்களால் ஆதரவளிக்கப்படுவதான லூப் மொபைலின் 2ஜி/எட்ஜ் மூலம் இயக்கப்படும் நெட்வொர்க்கை, மும்பையில் உள்ள 4,000 -க்கும் மேற்பட்ட செல் ஸைட்களால் ஆதரவளிக்கப்படுவதான ஏர்டெல்லின் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குடன் இணைக்கும் என்று கூறப்படுகிறது.
கஸ்டமர் சர்வீஸ்
மேலும் இது தனக்கு சொந்தமான சுமார் 220 அவுட்லெட்களின் மூலம் சந்தாதாரர்களுக்கு தலைசிறந்த கஸ்டமர் சர்வீஸை வழங்கி, பரந்துபட்ட பிரத்யேகமான ரீடெயில் ரீச்சுடன் திகழும் என்றும் கூறப்படுகிறது.
லூப் மொபைல் - ஏர்டெல் சேவை தொடரும்...
இவ்வொப்பந்தம் லூப் மொபைலின் சந்தாதாரர்களுக்கு தரமான சேவையை தொடர்ந்து வழங்குவதோடு, ஏர்டெல்லினுடைய நவீன போர்ட்ஃபோலியோவின் கூடுதல் நற்பயன்களையும், சுப்பீரியர் சர்வீசஸ், 3ஜி, 4ஜி, ஏர்டெல் மணி, விஏஎஸ் உள்ளிட்டவற்றிற்கான அக்செஸையும், உள்நாட்டு/சர்வதேச ரோமிங் வசதிகளையும் வழங்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications