வங்கித் துறையை மேம்படுத்த ரூ.11,200 கோடி நிதி ஒதுக்கீடு!! சிதம்பரம்..

டெல்லி: வங்கி துறை மேம்பாட்டுக்காக 2014-15ஆம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளில் மூலதன உள்ளீட்டிற்கென சுமார் 11,200 கோடி ரூபாயை வழங்க திட்டமிட்டுள்ளதாக திரு ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கி துறை திறம்பட செயல்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 8,023 வங்கி கிளைகள் திறக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கில், வங்கி துறை சேர்ந்த அதிகாரிகள் இதுவரை சுமார் 5,027 கிளைகளை மட்டுமே திறந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம் பொருத்த வேண்டும் என்ற இலக்கையும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டனர். இந்த உபரி நிதி உட்செலுத்தல் வங்கி துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய இடைக்கால பட்ஜெட் உரையின் போது கூறியுள்ளார்.

ரூ.14,000 கோடி உட்செலுத்தல்

ரூ.14,000 கோடி உட்செலுத்தல்

இந்த நிதியாண்டில் அரசு சுமார் 14,000 கோடி ரூபாயை பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் உட்புகுத்தியுள்ளது. இவற்றுள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமார் 2,000 கோடி ரூபாயையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுமார் 1,200 கோடி ரூபாயையும் பெற்றுள்ளன.

செயல்படா சொத்துக்கள்

செயல்படா சொத்துக்கள்

அதிகரித்து வரும் நான்-பர்ஃபார்மிங் அஸ்ஸெட்களினால் (என்பிஏ) வங்கிகள் கடும் திணறலுக்கு ஆளாகியுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திட்டம்

மாற்றுத் திட்டம்

"பொருளாதார நிலை சீராகும் பட்சத்தில், செயல்படா சொத்துக்களை கட்டுக்குள் கொண்டு வருவது, அதிக கடன் தொகைகளை வசூலிப்பது, ஆரோக்கியமான பாலன்ஸ் ஷீட்களை கட்டமைப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் செயல்படுத்துவோம் என்று வங்கியாளர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.2.36 லட்சம் கோடி

ரூ.2.36 லட்சம் கோடி

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகைகள், 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் போது இருந்த 1.83 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, சுமார் 28.5 சதவீதம் அதிகரித்து செப்டம்பர் மாதத்தின் போது 2.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+