இந்தியாவின் சூப்பர் பிராண்ட் டாடா குழுமம் தான்!!.. வேற யாரும் இல்லையா..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஹர்பின் முதல் ஏரோபிளேன் வரை அனைத்திலும் கால் தடம் பதித்த டாடா குழுமம், சுமார் 21.1 பில்லியன் டாலர் மதிப்புடன், இந்தியாவின் அதிக மதிப்பு கொண்ட பிராண்டாக, பிரபல பத்திரிக்கையான பிரான்டு பைனான்ஸ் குளோபல் அறிவித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவானாகிய ஆப்பிள் நிறுவனம் சுமார் 105 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகளவில் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நேற்றைக்கு வெளியிடப்பட்ட உலகின் 500 அதிக மதிப்புடைய பிராண்டுகளின் பட்டியலை பிராண்ட் ஃபைனான்ஸ் குளோபல் 500 என்ற அறிக்கையை வெளியிட்டது, ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் (79 பில்லியன் டாலர்) உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டாப் 10

டாப் 10

ஆப்பிள், சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து முதல் பத்து இடங்களில் கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிஸோன், ஜிஇ, ஏடி&டி, அமேசான், வால்-மார்ட் மற்றும் ஐபிஎம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

முதல் இடத்தில் டாடா

முதல் இடத்தில் டாடா

இந்தியாவை பொருத்தவரை டாடா குழுமம் அதன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அதன் உலகளாவிய ரேங்கிங்கையும் 2013ஆம் ஆண்டிலிருந்த 39-ஆவது இடத்திலிருந்து உயர்த்தி, தற்போது 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6ஆக இருந்தது, ஆனால் இந்த வருடம் அதன் எண்ணிக்கை 5ஆக குறைந்தது என்பது குறிப்பிடதக்கது.

மற்ற 4 நிறுவனங்கள்

மற்ற 4 நிறுவனங்கள்

டாடாவைத் தவிர்த்து, இத்தரவரிசைப் பட்டியலில் எஸ்பிஐ (347), ஏர்டெல் (381), ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (413) மற்றும் இந்தியன் ஆயில் (474) உள்ளிட்ட இதர நான்கு இந்திய நிறுவனங்களின் குளோபல் ரேங்கிங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

100 முதல் 34 வரை..

100 முதல் 34 வரை..

டாடாவின் பிராண்ட் மதிப்பு சுமார் 18.2 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 21.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் இது 2007ஆம் ஆண்டில் 100-ஆவது இடத்தில் இருந்த தன் ரேங்கிங்கையும் தொடர்ந்து முன்னேற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாவம் ஐடிசி..

பாவம் ஐடிசி..

இத்தரவரிசைப் பட்டியலில் இருந்து இவ்வருடம் வெளியேற்றப்பட்ட இந்திய நிறுவனம், 2013 ஆம் ஆண்டின் போது 445-ஆவது இடத்தைப் பிடித்திருந்த ஐடிசி நிறுவனம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata - most valuable brand in India

Diversified conglomerate Tata group was today declared India's most valuable brand with a value of $21.1 billion, while US-based technology giant Apple has retained its top position globally with about $105 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X