சென்னை: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் வெற்றிகரமாக பட்ஜெட் தாக்கல் செய்ததை தொடர்ந்து. தமிழக அரசு சுமார் 16 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மின்சாரப் பிரச்சனை இருந்ததால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை குறைத்து கொண்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
வெளிநாட்டு நிறுவனங்களின் பல கோரிக்கைகளுக்கு உட்பட்டு தமிழக அரசு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் தமிழகத்தில் தொழிற் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நிதி பறிமாற்றம், வர்த்தகம் என பல வகையில் தமிழக்திற்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மின்சாரப் பிரச்சனைகளால் பல நிறுவனங்களின் முதலீடு கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சென்றது குறிப்பிடதக்கது. இந்நிலை குறித்து தமிழக சட்டசபையில் அமளி எற்பட்டது நினைவிருக்கலாம்.
16 நிறுவனங்கள்
ஐப்பான், கொரியா என பல்வேறு நாடுகளை சேர்ந்த 16 நிறுவனங்கள் தென்னிந்தியாவில் தங்களது வர்த்தகத்தை வலிமையைப்படுத்த தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
முதலீடு
இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் 5,000 கோடி மதிப்புடையது, இதில் 7 நிறுவனங்கள் 350 கோடி ரூபாயிக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
தொழிற்துறை
இந்த 16 நிறுவனங்களில் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம், மேலும் விற்பனை, ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களும் இதில் அடங்கும். தமிழகத்தின் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு இந்த முதலீடு பெரும் உதவியாக இருக்கும்.
நிறுவனங்களின் கோரிக்கை
அன்னிய முதலீட்டிற்கு சாதகமாக தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு தடையில்லா மின்சாரம், நில ஒதுக்கீடு என பல சலுகைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் ஜெ, முன்னிலையில் 24ஆம் தேதியன்று கையெழுத்திட உள்ளது.


Click it and Unblock the Notifications