மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்க தோணும்..

சென்னை: காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறவங்க பல பேருக்கு நடுவுல, காசை என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறவங்க சிலரும் இருக்காங்க!! இவர்களை பற்றி தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம். எல்லாருக்கும் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏன் உங்களுக்கும் கூடத்தான். மாசம் பொறந்தா லட்சக் கணக்கில் சம்பளம் வாங்குவது எப்போ என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டு. நல்ல விஷயம் தான் ஆனா அப்படி சம்பாதிச்சு என்ன பண்ணப்போறீங்க? எவ்வளவு சம்பாதித்தாலும் அரை ஜான் வயிற்றுக்கு சப்பிட உணவு இருந்தால் போது.

உலகம் முழுவதும் பலப் பணக்காரர்கள், விலையுயர்ந்த அதே சமயம் மதிப்பு சற்றும் இல்லாத பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர். இது அவர்களின் செல்வாக்கை உயர்த்திக் காட்டுவதற்குப் பதிலாக அவர்களை முட்டாள்களாகவே உலகிற்குக் காட்டுகிறது (சில முட்டாள்களே மட்டும் இப்படி வாழ்ந்தால் தான் செல்வாக்கு இருக்கும் என்று நினைத்து கொள்கின்றனர்). நீங்கள் எந்த விதமான திட்டத்துடன் இருந்தாலும், ஒன்றை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இது போன்ற ஆடம்பரப் பொருட்களில் செலவை செய்துவிட்டு பின்னர் ஏமாந்து நிற்காதீர்கள்.

சிரி இப்ப காசை எப்படியெல்லாம் வீணடிக்க முடியும் என்று பார்ப்போமா?

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்

நீங்க கார் பைத்தியமா? உங்ககிட்ட இருக்கிற பணத்தை வைத்து எந்தக் காரை வாங்கப்போறீங்க? விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை ஒதுக்குங்க, அது நமக்கு வேணாம். இந்த கார்கள், சாலையில் ஓடும் நேரத்தை விட வீட்டு காராஜில் கிடக்கும் நேரம் அதிகம். சில சீமான்கள் இது போன்ற காரை தங்கள் "பர்சனாலிடியை" கூட்டும் என நினைத்து வாங்குகிறார்கள். சில சமயம் தம் நண்பர்கள் முன் அதைக் கொண்டு சென்று பீற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை மறந்து விடுகிறார்கள். நம்ம ஊர் ட்ராபிக்கில் ஒரு சாதாரண காரும் ஸ்போர்ட்ஸ் காரும் ஒரே வேகத்தில் தான் போக முடியும். அப்படியிருக்க, யார் இவர்களைப் பார்த்து பொறாமைப் படவோ அல்லது உங்கள் கார் எவ்வளவு வேகமாகச் செல்லும் என்ற ஆர்வத்தோடோ இருக்கப் போகிறார்கள்?

ஒரு உல்லாசப் படகு

ஒரு உல்லாசப் படகு

கோடீசுவரர்கள் தாங்கள் விரும்பிய ஒன்றை வாங்க பெரிதும் யோசிப்பதில்லை. ஏனென்றால் பணம் தான் கொட்டிக் கிடக்கிறதே? பாருங்க... ஒரு உல்லாசப் படகை வாங்க சில கோடிகளை செலவிடும் அவர்கள், வெகு குறைவாகவே அதைப் பயன் படுத்துகிறார்கள். இந்தப் படகுகள், உபயோகமில்லாமல் பல நாள் தூங்குவதோடு, அதை பராமரிக்க ஒரு பெரும் தொகை செலவழியும். இதுல கொடுமை என்னவென்றால், அதை அவர்கள் உபயோகித்தாலும் உபயோகிக்காவிட்டாலும் தேய்மானத்தால் அதன் மதிப்பை அது தொடர்ந்து மிக விரைவாக இழந்து வரும். இன்றைக்குப் பெட்ரோல் விலையை வைத்துப் பார்த்தால் ஒரு நாள் மீன் பிடி சவாரிக்கு பல ஆயிரம் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே ஒரு படகை பல கோடிகளைக் கொட்டி வாங்குவது ஒரு நல்ல முடிவல்ல.

பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி

நீங்க என்றைக்காவது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள நினைத்ததுண்டா? அப்ப அதை செய்துகொள்ள அல்லது உங்கள் தொப்பையை குறைக்கப் பல பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒரு பெரும் தொகை செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளவும். இது இப்படி இருக்க, நம்ம இந்தியாவில் உள்ள சில கொழுத்த பணக்காரர்கள், என்ன ஏது என்று முன் பின் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்காமல் இதைப் போன்ற சர்ஜரிகளுக்கு செலவிடுகிறார்கள். தாங்கள் இளமையாகவும், மெலிந்தும் வளைந்தும் இருக்கவேண்டுமென்று, தங்கள் மீது தாங்களுக்கே விருப்பமில்லாமல் சர்ஜரி போன்ற ஆபத்தான முடிவுகளை மேற்கொள்ளுகிறார்கள்.

நகைகள்

நகைகள்

எந்த ஒரு பார்டியோ அல்லது பண்டிகையோ நகைகள் இல்லாமல் முழுமை பெறாது (இது இந்தியர்களின் காலாச்சாரம்!! எல்லாவற்றிலும் காலாச்சரம் மற்றிவிட்டது அதை தவிற). ஓரு டிசைனர் ஆடை, அழகான காலணி மற்றும் அருமையான நகை ஆகியவை அணிந்துகொண்டால் ஒரு கவர்ச்சியான ஒரு தோற்றத்தைத் தரும். எல்லாம் சரி, எப்படி இதையெல்லாம் வாங்குவது? சந்தேகமிலாமல் அழகுசாதன கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் தான். ஆனால் இந்த பணக்காரக் கூட்டம், இவற்றை வாங்க விரும்புவதோடு ஏலங்களில் மிக ஆடம்பரமான நகைகளை ஊதாரித்தனமாக செலவு செய்து வாங்குகின்றனர். இது போன்ற ஆடம்பர கண்கவர் நகைகள், பார்பதற்கு மட்டுமே அழகாக இருப்பதோடு மிகவும் பாரமாகவும், மேலும் அணிந்துகொள்ள எளிதாக இராது. இன்னும் சொல்லப் போனால் இது போன்ற அரிதான உபயோகமற்றவற்றை வாங்கி இவர்கள் வீட்டை ஒரு அருங்காட்சியகமாக மாற்றிவிடுவார்கள்.

ஆடம்பர வீடுகள்

ஆடம்பர வீடுகள்

பெரும் தொழிலதிபர்கள் சிலர் வீட்டிற்கு நீங்கள் சென்றால் ஏதோ ரிசார்ட்டில் நுழைந்த ஒரு உணர்வு உங்களுக்கு வரும். அதன் உள்ளேயே கோல்ஃப் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், ஹெலிகாப்டர் தளம், மிகப்பெரிய நுழைவறை ஆகியவை இருப்பதோடு வீட்டின் முன்பு ஏரியோ அல்லது ஆறோ அமைந்திருக்கும். ஒரு வீடு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் வீடும் ஒன்று. வாழ்கைக்குத் தேவையற்ற மிகப்பெரிய வீட்டை வாங்குவது அறிவார்ந்த விஷயம் அல்ல. வீட்டுச் சொந்தக்காரர் தன் கார் சாவியை மறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் அதை எடுக்க ஒரு மைல் நடக்கவேண்டியிருக்கும் (கொஞ்சம் ஓவர் தான்....பரவால்ல).

பணியாளர்கள்

பணியாளர்கள்

வீட்டைப் பராமரிக்க மற்றும் தினசரி வேலைகளில் உங்களுக்கு உதவ பணியாளர்கள் தேவைதான். ஆனால் உங்களுடனேயே 24 மணி நேரமும் இருந்து உங்கள் குடும்ப உறுப்பினர் போல உங்களைப் பார்த்துக்கொள்ள ஒருவரை வைத்துக்கொள்ளும் வழக்கம் சற்று நெருடலைத் தருவதாக உள்ளது. உங்கள் வேலையாட்கள் எப்போதும் உங்களைச் சுற்றியே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் சொந்த வீட்டிலேயே உங்களால் சவுகரியமாகவோ அல்லது நிம்மதியாகவோ இருக்க முடியாது. இது போன்று வீட்டை அலுவலகம் போல மாற்ற நினைப்பது நல்ல முடிவாகாது என்றாலும் சில மேல்மட்டக்காரர்கள் இதைச் சங்கடமின்றி செய்கின்றனர்.

வேலைப்பாடுள்ள ஆடைகள் (டிசைனர்)

வேலைப்பாடுள்ள ஆடைகள் (டிசைனர்)

பொதுவாக மக்கள், தங்கள் கலாச்சாரம், வசதி மற்றும் நவீனம் கருதி ஆடைகளை அணிவர். ஆனால் உடையின் அடிப்படை சாராம்சம் உடலை மறைப்பது தானே? சில பிரபலங்களோ அல்லது வர்த்தக முதலாளிகளோ பார்ட்டிகளில் எவ்வாறு உடையணிகிறார்கள் என்று நீங்கள் பார்த்ததுண்டா? இவர்களில் வித்தியாசமாக உடையணியக்கூடிய ஒருவர் எப்போதும் இருப்பதோடு, பார்ப்பதற்குக் கொடுமையாக இருந்தாலும் அநியாயமான விலையைக் கொடுத்து அதை வாங்கியிருப்பார். இன்னும் சில ஆடம்பரப் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் அணிந்திருக்கும் உடை நடமாடும் நகைக் கடை போல இருக்கும். இது முட்டாள்தனமாக இருப்பதோடு, அவர்கள் தங்களை கவர்ச்சியாகக் காட்டிக்கொள்ள ரொம்பவும் மெனக்கெடுவதையும் காட்டுகிறது.

விலையுயர்ந்த மதுபானங்க்ள்

விலையுயர்ந்த மதுபானங்க்ள்

கோடிக்கணக்கான ரூபாய் இருந்தால் அதை எதிலாவது போடவேண்டும் என விரும்புவது வாஸ்தவம்தான். உலகத்தில் உள்ள அனைத்து உல்லாச வைபோகங்களிலும் நீங்கள் செலவழிப்பீர்கள். ஆனா "பழைய சரக்கில்" கொண்டுபோய் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழிப்பது சற்று ஆச்சர்யமூட்டுகிறது. ஒரு பெரும் தொகையைக் கொடுத்து ஏலத்தில் இந்த பழைய வைன் சமாச்சாரங்களை வாங்கி தங்கள் "வைன் கலெக்ஷனில்" வைத்துக்கொள்வார்கள். இதெல்லாம் சத்தியமாக ஒருவருடைய கவுரவத்தை உயர்த்தப்போவதில்லை ஆனால் காசைக் கண்டிப்பாகக் கரியாக்கும்.

மல்லையா

மல்லையா

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+