டெல்லி: ஏர் இந்தியா, ஜெட்லைட், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் 2012- 13ஆம் நிதியாண்டின் நிறுவன இயக்க நஷ்டமாக முறையே ரூ.3,159.6 கோடி, ரூ246.8 கோடி மற்றும் ரூ279.8 கோடி ரூபாயை இழந்துள்ளதால் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் அவையில் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில் ஜெட்ஏர்வேஸ், இண்டிகோ ,கோஏர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் இயக்க லாபமாக முறையே ரூ122.6 கோடி ரூ795.8 கோடி மற்றும் 85.1 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே .சி. வேணுகோபால் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் விமான இயக்க ஆய்வாளர்களின் பற்றாக்குறை எண்ணிக்கையை முதன்மை காரணமாக கொண்டு இந்தியாவின் பாதுகாப்பு மதிப்பீடுகளை பயனுள்ள பாதுகாப்பு மேற்பார்வை வழங்குவதில் இயலாமை என்று கீழிறக்கம் செய்து குறைத்து மதிப்பிட்டுள்ளது.

எஃப்ஏஏ குறைத்து மதிப்பிட்டதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் ஸ்டார் அலையன்ஸ் - டன் இணைவதில் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து உலகளாவிய ஏர்லைன் நிறுவனங்கள் எஃப்ஏஏ - வின் பாதுகாப்பு மதிப்பீடு அந்தந்த அரசாங்கம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றும், எஃப்ஏஏ அளித்துள்ள குறைந்த மதிப்பீட்டின் காரணமாக ஏர் இந்தியா ஸ்டார் அலையன்ஸ் - டன் இணைவதில் எந்த ஒரு நேரடி விளைவும் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளதை வேணு கோபால் சுட்டி காட்டினார்.
டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் குறித்து கூறிய அவர் 2012- 13 - ல் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் ரூ9716.84 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது என்றும்,இதில் ரூ4468.77 கோடி ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா - வின் பங்கு ஆகும் என்றும் கூறினார்.
ஏர்ஏஸியா, மற்றும் டாடா-சியா நிறுவனங்களிடமிருந்து திட்டமிடப்பட்ட விமான இயக்கங்களை தொடங்க ஆரம்பகட்ட மறுப்பு-இல்லை சான்றிதழுக்கான கோரிக்கைகளை
கடந்த ஆண்டு அரசு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications