பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி எஸ். டி. ஷிபுலாலின் பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது, இந்நிலையில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இப்பதவியில் அமர்த்தப்படுவார் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி புதனன்று கூறினார்.
தலைமை மாற்றத்தை செம்மையாக செயல்படுத்தும் வகையில், புதிய தலைமை செயலதிகாரிக்கு உதவி புரிவேன் என்றும் அதுவரை நிறுவனத்தில் தானும் பணிபுரிவேன் என்றும் நாராயணமூர்த்தி கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ- வை அந்நிறுவனம் அமைத்தது. இந்நிறுவனத்தை தொடர்ந்து இப்போது இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதில் புரட்சியை ஏற்படுத்திய இன்போசிஸ் புதிய சிஇஓவை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது.
யார் புதிய சிஇஒ
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தை அனுகியபோது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை போலவே குழப்பமான பதிலையே கூறியது. நிறுவனத்திற்கு வெளியில் இருந்து புதிய தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதை இன்போசிஸ் நிறுவனம் மறுக்காத போதிலும், அநேகமாக தற்போது அந்நிறுவனத்தில் பணிபுரியும் பி.ஜி. ஸ்ரீனிவாஸ் மற்றும் UB பிரவின் ராவ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பி.ஜி. ஸ்ரீனிவாஸ்
ஆரம்ப அறிகுறிகளை வைத்து கணிக்கையில் தலைமைப் பதவி பி.ஜி. ஸ்ரீனிவாஸ் பக்கம் சாய்வதாகத் தொன்றுகின்றன.
சிஇஒ அவர் தான்.. அதிகாரம் என்னுடையது...
புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கூட நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்று நாராயணமூர்த்தி கூறினார்.
ஷிபுலால்
ஆலோசனை (Consulting), தயாரிப்புகள் & தளங்கள் (Products & Platforms) மற்றும் ஒருங்கிணைப்பு (system integration) போன்ற பகுதிகளில் சிபுலால் தலைமையின் கீழ் இன்ஃபோசிஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தற்போதிய நிலை
இந்த உத்தி புதிய சிஇஒ தொடந்து பணிபுரிவார் என்று கூறிய நாராயணமூர்த்தி வழுமையான பாரம்பரிய வணிகங்கள் மூலம் கிடைத்த பெரிய ஒப்பந்தங்கள் மீது நிறுவனம் கவனத்தை இழந்து விட்டதாகவும் கூறினார்.
ஆட்குறைப்பு..
புதிய ஒப்பந்தங்களின் நிலை கவலைகிடமாக உள்ளதால் இன்போசிஸ் நிறுவனம் ஆட்குறைப்பு திட்டத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து நாராயணமூர்த்தி கேட்டபோது அவர் ஒரே வரியில் தன் பதிலை முடித்து கொண்டார் "தகுதியானவர்களுக்கு மட்டுமே இன்போசிஸ் நிறுவனத்தில் இடம், மற்றவர்களுக்கு பை பை, ஐ எம் சாரி!!"
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications